தேர்வு இல்லை.. இன்டர்வியூ மட்டுமே.. மாதசம்பளம் ரூ.43 ஆயிரம்.. நெல்லை ஆவினில் சூப்பர் வேலைவாய்ப்பு
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலிப்பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் வெட்னரி கன்சல்டன்ட்(கால்நடை ஆலோசகர்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc.,& A) முடித்திருப்பதோடு, கம்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் டூவீலர் ஓட்ட தெரிந்து லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி வெட்னரி கன்சல்டன்ட் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது என்பத 01.07.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Indivdual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக மார்ச் 20ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும். நேர்க்காணல் என்பது The General Manager, Tirunelveli District Co-operative Milk Producers Union Limited, Tirunelveli - 627 007 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0462 - 2552004, 99947 29296 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications