IT வேலை ரெடி.. பிடெக், பிஎஸ்சி, பிசிஏ, எம்சிஏ படித்தோருக்கு சூப்பர் சான்ஸ்.. சம்பளம் என்ன தெரியுமா?
சென்னை: Neutara ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் விண்ணப்பம் செய்திருப்பவர்கள் கட்டாயமாக பிடெக், பிஎஸ்சி, பிசிஏ, எம்சிஏ படித்திருக்க வேண்டும்.
நம் நாட்டில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் Neutara டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நம் நாட்டில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் Cloud மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தன் Neutara நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி Neutara நிறுவனத்தில் டிரெய்னி சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பிஎஸ்சி, பிசிஏ, எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக விண்ணப்பம் செய்வோர் 2023, 2024, 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் எதுவும் இருக்க கூடாது. அதோடு Node.Js டிரெய்னிங் பெற்றிருக்க வேண்டும். இதுதவிர நல்ல கம்யூனிகேஷன் திறமை, லாஜிக்கல் திங்கிங், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.3 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது Fresher-க்கான வேலைவாய்ப்பாகும். எனவே பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் மேற்கூறிய தகுதி இருப்பின் விண்ணப்பம் செய்யலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Neutara-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். ஏனென்றால் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வேலைவாய்ப்பு குறித்த அறிவி்பபு என்பது டிசம்பர் 27 ம் தேதியே வெளியாகி விட்டது. இதனால் விரைவில் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications