செமவாய்ப்பு.. மாதம் ரூ.38,000 சம்பளம்.. நெய்வேலி என்எல்சியில் சுகாதார ஆய்வாளர் பணி! மிஸ் பண்ணாதீங்க!
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.38 ஆயிரம் சம்பளத்தில் பணி வழங்கப்பட உள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டின் ‛நவ்ரத்னா' நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சியில் காலியாக உள்ள ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
நெய்வேலி என்எல்சியில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் (சுகாதார ஆய்வாளர்) பணிக்கு 18 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி பொதுபிரிவை சேர்ந்தவர்கள் 10 பேர், இடபிள்யூஎஸ் பிரிவில் ஒருவர், ஓபிசி (என்சிஎல்) பிரிவில் மற்றும் எஸ்சி பிரிவில் 3 பேர் என மொத்தம் 18 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பொது பிரிவினராக இருந்தால் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினராக இருந்தால் 33 வயதுக்குள்ளும், எஸ்சி பிரிவாக இருந்தால் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தற்போது எஸ்டி பிரிவுக்கு பணி ஒதுக்கீடு இல்லாவிட்டாலும் அவர்களும் பொதுபிரிவின் கீழ் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணியை பெற விரும்புவோர் 12ம் வகுப்பு படிப்பில் தேர்ச்சி பெற்று டிப்ளமோ பிரிவில் ஹெல்த் மற்றும் சானிடேஷன் (Diploma in Health and Sanitation) படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.38 ஆயிரம் வழங்கப்படும். பிஎப், பணியாளருக்கான மருத்துவ வசதிகளும் உள்ளிட்டவை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் www.nlcindia.in எனும் அதிகார்ப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.486 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, முன்னாள் படை வீரர்கள் ரூ.236 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் இந்த பணி என்பது தற்காலிக பணியாகும். இப்போது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications