நோ எக்ஸாம்.. மாதம் ரூ.70,000 ஊதியம்! அழைக்கும் என்எப்எஸ்யூ.. சென்னையிலும் பணி வாய்ப்பு! ரெடியா?
சென்னை: தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்எப்எஸ்யூ (NFSU) எனும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (National Forensic Sciences University)செயல்பட்டு வருகிறது.

இந்த பல்கலைக்கழகம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை, அமலாக்கத்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு உதவியும் செய்து வருகிறது.
இந்நிலையில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள சயின்டிபிக் அசிஸ்டென்ட் (Scientific Assistant ) பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்டெக், எம்இ, எம்எஸ்சி, எம்சிஏ ஆகிய படிப்புகளை டிஜிட்டல் பாரின்சிக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது சைபர் செக்யூரிட்டி அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு நிகரான பிரிவில் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஇ, பிடெக், பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கூறிய படிப்புகளை படித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nfsu.ac.in எனும் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 24ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 6 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்க்காணலில் சிறப்பாக செயல்படுவோர் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இது ஒரு தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் டெல்லி, சண்டிகர், மகாராஷ்டிராவின் மும்பை, குஜராத் காந்தி நகர், தமிழ்நாட்டில் சென்னை, மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] எனும் இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications