மாதசம்பளம் ரூ.44,900 டூ ரூ.2.15 லட்சம்.. தேசிய நெடுஞ்சாலை துறையில் சூப்பர் வேலை! செம வாய்ப்பு
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.44,900 முதல் ரூ.2.15 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணியை பெறலாம்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்எச்ஐடிசிஎல் (NHIDCL) எனும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட் (National Highways and Infrastructure Development Corporation Limited) செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் என்எச்ஐடிசிஎல் நிறுவனத்தில் வெவ்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: என்எச்ஐடிசிஎல் நிறுவனத்தில் தற்போது ஜெனரல் மேனேஜர் பதவிக்கு டி/பி பணிக்கு 3 பேர், நிலம்கையகப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிக்கு 8 பேர், சட்டத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். துணை பொது மேலாளர் பதவிக்கு டி/பி பணிக்கு 10 பேர், நிலம்கையகப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிக்கு 12 பேர், நிதி மற்றும் எச்ஆர் பிரிவுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேனேஜர்: மேலும் மேனேஜர் பிரிவில் டி/பி பணிக்கு 20 பேர், நிலம்கையகப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிக்கு 18 பேர், சட்டப்பிரிவுக்கு ஒருவர், துணை மேலாளர் (டி/பி) பணிக்கு 20 பேர், கம்பெனி செக்ரட்டரி பணிக்கு ஒருவர், ஜூனியர் மேனேஜர் (எச்ஆர்) பணிக்கு 11 பேர் என மொத்ம் 107 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: டி/பி பிரிவு பணிக்கு சிவில் என்ஜினீயரிங் படிப்பையும்,முடித்தவர்களும், சட்டப்பிரிவுக்கான பணிக்கு சட்டப்படிப்பையும், நிதி பிரிவு பணிக்கு ஐசிஏஐ, ஐசிடபிள்யூஏஐ, எம்பிஏ(பைனான்ஸ்), நிலம்கையகப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணி, துணை பொது மேலாளர் (எச்ஆர்), ஜூனியர் மேலாளர், கம்பெனி செக்ரட்டரி பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். துணை மேலாளர் (டி/பி) பணிக்கு டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மாதசம்பளம்: ஜெனரல் மேலாளர் பணிக்கு மாதம் ரூ.1.23 லட்சம் முதல் ரூ.2.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். துணை ஜெனரல் மேலாளர் பணிக்கு ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் வரையும், மேலாளர் பணிக்கு ரூ.67,700 முதல் ரூ.2.08 லட்சம் வரையும் சம்பளம் கிடைக்கும். அதேபோல் துணை மேலாளர், கம்பெனி செக்ரட்டரி பணிக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வரையும், ஜூனியர் மேனேஜர் (எச்ஆர்) பணிக்கு ரூ.44,900 முதல் ரூ1.42 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 56 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் nhidcl.com இணையதளம் மூலம் செப்டம்பர் மாதம் 11ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications