மிஸ் பண்ணாதீங்க.. ரூ.92,300 வரை சம்பளம்! என்ஐஇஎல்ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. ரெடியா?
சென்னை: மத்திய அரசின் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக ஏராளமான பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் என்ஐஇஎல்ஐடி எனும்
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
டிராப்ட்ஸ்மேன் சி: இந்த பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து ஐடிஐயில் ஸ்ட்ரீம் மெக்கானிக்க படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
லேப் அசிஸ்டென்ட் பி: இந்த பணிக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்டர் (சயின்ஸ்) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
லேப் அசிஸ்டென்ட் ஏ: இந்த பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்டர் (சயின்ஸ்) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
டிரேட்ஸ்மேன் பி-ஹெல்பர் பி: இந்த பணிக்கு 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு முடித்து ஐடியைில் 2 ஆண்டுக்கான ஸ்ட்ரீம் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஹெல்பர்-பி பணிக்கு 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு: இந்த பணிகள் அனைத்துக்குள் விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதசம்பளம்: டிராப்ட்ஸ்மேன் சி பணிக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையும், லேப் அசிஸ்டென்ட் பி பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் லேப் அசிஸ்டென்ட் ஏ மற்றும் டிரேட்ஸ்மென் பி பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், ஹெல்பர் பி பணிக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையும் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://recruitme-delhi.nielit.gov.in இணையதளம் மூலம் அக்டோபர் 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்கள் என்றால் விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றம் திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: மார்ச் 14ல் இண்டர்வியூ.. எச்சிஎல் முக்கிய அறிவிப்பு.. சூப்பர் வேலை -
IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் ஐடி வேலை.. அழைக்கும் HCL.. மார்ச் 14ல் சென்னையில் இண்டர்வியூ -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications