நீலகிரியில் பள்ளியில் வேலைவாய்ப்பு.. பிஎட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஏகல்வயா பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாடு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி கல்வி சங்கத்தின் கீழ் நீலகிரி உதகை மு.பாலாசா ஏகல்வயா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலம் என்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

Nilgiri Ekalvya School Employment Notification Released, How to apply? Full details

காலிப்பணியிடங்கள் விவரம்: மொத்தம் 7 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் - 1, ஆங்கிலம் - 1, கணிதம் - 2, அறிவியல் - 2 மற்றும் சமூக அறிவியல் - 1 என மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதேபோல் 4 முதுகலை பட்டதாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. வரலாறு -1, கணிதம் -1, புவியியல் - 1, உயிரியல் - 1 என 4 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்புடன் பிஎட் படித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி பணியிடங்களுக்கு முதுகலை பட்டப்படிப்புடன் பிஎட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், கற்பிப்பதில் முன் அனுபவம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

பணியிட விவரம்: இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது தான். இந்த கல்வியாண்டு 2023-2024 வரை மட்டுமே பணியில் தொடர முடியும்.

சம்பள விவரம்: தொகுப்பூதிய முறையில் நியமனம் செய்யப்படுவதால், முதகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: பள்ளி அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் நாளை 18ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை - 643006 .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+