8 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்க.. வருவாய் துறையில் சூப்பர் ஜாப்.. ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்
நீலகிரி: நீலகிரி மாவட்ட வருவாய் துறையில் காலியாக 3 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நீலகிரி மாவட்ட வருவாய் துறையில் காலியாக உள்ள 3 டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மு. அருணா ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார். கடந்த 2 ஆம் தேதி செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த டிரைவர் பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

பணி விவரம்: நீலகிரி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 3 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இனசுழற்சி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழை ஒரு பாடமாக எடுத்து குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கூடுதலாக HMV / LMV ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.7.2023 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 18 - வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பிசி / எம்.பி.சி பிரிவினருக்கு 34 ஆகும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 37- வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு தபாலில் 30. 11. 2023 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்படாது. கல்வி தகுதி மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களையும் இணைத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். 30. 11. 2023 அன்று மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு தனித்தனியே நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 19,500 முதல் 62,000 வரை கிடைக்கும்.
காலிப்பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://nilgiris.nic.in/notice_category/recruitment/ இந்த இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications