இண்டர்வியூ கிடையாது.. டிஎன்பிஎஸ்சியில் 615 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இண்டர்வியூ இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர் உள்ளிட்ட இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பணி கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான். பல்வேறு துறைகளிலிருக்கும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது உரிய அறிவிப்புகளை டிஎன்பிஸ்சி வெளியிட்டு நிரப்பி வருகிறது.

job TNPSC Employment

பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் நிறைவு பெற்றுள்ளது. 3935 பணியிடங்களுக்கு நடத்தப்படும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. விண்ணப்பிக்கும் தேதி முடிந்துள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் திருத்தம் மேற்கோள்ள 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இண்டர்வியூ இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 615 பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), சமூக அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகளில் 615 காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதியை பொறுத்தவரை பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். ஏதாவது ஒரு டிகிரி, இன்ஜினியரிங், முதுகலை பட்டம் படித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க இன்று முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் வரும் 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடபெறும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தேர்வர்கள் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
https://tnpsc.gov.in/Document/english/CTS%20-Non%20Interview%20English_.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+