கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை.. 337 பணியிடங்கள்! மெரிட் அடிப்படையில் தேர்வு.. ரெடியா?
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெரிட் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்படுகிறது. இந்த அணுமின் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அணு மின் நிலையத்தில் உள்ள தொழில்நுட்ப பணிகள், கட்டுமான பணிகள் இதர பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையிலும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் விவரம்:
அந்த வகையில் தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஐடிஐ தகுதி:
* ஃபிட்டர் - 24
* மெஷினிஸ்ட் - 04
* வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) - 04
* எலக்ட்ரீஷியன் - 35
* எலக்ட்ரானிக் மெக்கானிக் - 15
* பம்ப் ஆபரேட்டர் - மெக்கானிக் - 04
* இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 17
* மெக்கானிக் குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங் - 11
* கணினி ஆபரேட்டர் - புரோகிராமிங் உதவியாளர் (COPA) - 05
டிப்ளமோ அப்ரண்டிஸ் காலியிட விவரங்கள்:
* மெக்கானிக்கல் - 42
* எலக்ட்ரிக்கல் - 24
* கெமிக்கல் - 05
* எலக்ட்ரானிக்ஸ் - 15
* சிவில் - 08
டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள்
* மெக்கானிக்கல் - 28
* எலக்ட்ரிக்கல் - 16
* கெமிக்கல் - 03
* இன்ஸ்ட்ருமென்டேஷன் - 11
* எலக்ட்ரானிக்ஸ் - 09
* சிவில் - 08
* பி.எஸ்சி (இயற்பியல்/வேதியியல்) - 26
* பி.ஏ/பி.எஸ்சி/பி.காம்/ஏதேனும் பட்டம் - 20
துறை சார்ந்த பிரிவிபில், ஐடிஐ, டிப்ளமோ,பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
21.07.2025 தேதிப்படி 14 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.
ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது ஓபிசி பிரிவினர் என்றால் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
* ஐடிஐ அப்ரெண்டீஸ் - ரூ.7,700
* டிப்ளமோ அப்ரெண்டீஸ் - ரூ. 8,000
* பட்டதாரி அப்ரெண்டீஸ் - ரூ.9 ஆயிரம்
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் https://www.nats.education.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21.07.2025 கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை உரிய ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Manager(HRM,
Kudankulam Nuclear power project,
Nuclear power corporation of india Limited,
Kudankulam PO, Radhapuram Taluk,
Tirunelveli District, Tamil Nadu: 627106
விருப்பம் உள்ளவர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக ஒருமுறை படித்து உறுதி செய்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_20062025_01.pdf












Click it and Unblock the Notifications