ரூ.38,000 ஊதியம் + பல சலுகைகள்.. இன்டர்வியூ இன்றி என்பிசிஐஎல் அலுவலக வேலை! பெண்களுக்கும் வாய்ப்பு
சென்னை: என்பிசிஐஎல் எனும் இந்திய அணுசக்தி கழகம் என்பது நம் நாட்டுக்கு தேவையான மின்சார தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் என்பிசிஐஎல் நிறுவனத்தில் ரூ.38,250 மாதசம்பளம் + டிராவல் அலோவன்ஸ், வீட்டு வாடகை, பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி உள்பட ஏராளமான சலுகைகளுடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் கூடங்குளத்தில் கூட நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் நிறுவனமாக என்பிசிஐஎல் எனும் இந்திய அணுசக்தி கழகம் (NPCIL or Nuclear Power Corporation Of India) செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதன் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அணுசக்தி கழகம் என்பது அணுக்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்வதை நிர்வகித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின் படி அசிஸ்டென்ட் கிரேட் - I பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் அசிஸ்டென்ட் கிரேட் - I (எச்ஆர்) பணிக்கு 29 பேர், அசிஸ்டென்ட் கிரேட் - I (எஃப் அண்ட் ஏ) பணிக்கு 17 பேர், அசிஸ்டென்ட் கிரேட் - I (சி அண்ட் எம்எம்) பணிக்கு 12 பேர் என மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாத சம்பளம்: இந்த 3 வகையான பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.38,250 வரை வழங்கப்படும். இதில் ரூ.25,500 என்பது அடிப்படை சம்பளமாகவும், ரூ.12,750 என்பது டிஏவாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர டிரான்ஸ்போர்ட் அலோவன்ஸ், லீவ் டிராவல் அலோவன்ஸ், வீட்டு வாடகைக்கான அலோவன்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
பிற சலுகைகள்: இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மெடிக்கல் வசதி, பணி செய்யும் இடத்திலேயே பணியாளர்களின் குழந்தைகளுளின் படிப்புக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். அதோடு கேபிள் டிவிக்கான மாத கட்டணம், நியூஸ் பேப்பருக்கான மாத கட்டணம், கேன்டீனில் உணவுக்கான மானியம் என்பது வழங்கப்படும். அதோடு பணியில் சிறப்பாக செயல்படுவோருக்கு இன்சென்டிவ் வழங்கப்படும்.
மேலும் வீடு கட்ட விரும்புவோருக்கும், பொது தேவைகளுக்கும் பணியாளர்களுக்கு முன்பணம் என்பது வழங்கப்படும். இதுதவிர பிஎஃப், கிராசூட்டி, பணி ஓய்வுக்கு பிந்தைய கால மருத்துவ உதவி, குரூப் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி - வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 25.06.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் வயது சலுகை உண்டு.
விண்ணப்ப கட்டணம்: இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் என்பது பொதுப்பிரிவு, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்சி, எஸ்டி, பிடபிள்பியூ, முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு பொருந்தாது. இவர்கள் விண்ணப்பம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பணி எங்கு: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மும்பையில் உள்ள என்பிசிஐஎல் தலைமை அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். அதுதவிர என்பிசிஎல்லின் பிற இடங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் கூடங்குளத்திலும் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதுதவிர பிற மாநிலங்களிலும் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு என்பிசிஐஎல்-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.npcilcareers.co.in/ சென்று ஜுன் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, டைப்ரைட்டிங் தேர்வு, கம்ப்யூட்டர் ப்ரோபிசிஎன்சி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள். இதன்மூலம் இன்டர்வியூ என்பது கிடையாது. இதில் எழுத்து தேர்வு என்பது பிரிலிமினரி டெஸ்ட் மற்றும் அட்வான்ஸ்ட் டெஸ்ட் மூலம் நடத்தப்படும்.
கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று பார்க்கலாம். அந்த அறிவிப்பை பார்க்கும்போது முதல் பாதி ஹிந்தி மொழியில் இருக்கும். இதனால் கூடுததல் விபரங்களை அறிய விரும்புவோர் நேரடியாக 19ம் பக்கத்துக்கு சென்று ஆங்கிலத்தில் உள்ள அறிவிப்பை படித்து முழுவிபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
Federal Bank: ஃபெடரல் வங்கியில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி முடித்திருந்தால் போதும்.. செம சான்ஸ்! விட்றாதீங்க -
IT Jobs: டிகிரி முடித்தவரா? நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications