வீட்டில் இருந்தே வேலை.. அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.. ஐடி நிறுவனத்தில் சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்யும் வாய்ப்புடன் காலியிடங்களை நிரப்ப Numerator எனும் ஐடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

Numerator ஐடி நிறுவனத்தில் தற்போது அசோசியேட் குவாலிட்டி அசோசியேட் இன்ஜினியர் (Asoc. QA Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பணி அனுபவம் அல்லது குறிப்பிட்ட கல்வி தகுதி என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

it jobs job jobs

ஆனாலும் பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில திறமைகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களுக்கு Core Java, Python பற்றிய அறிவு இருக்க வேண்டும். எஸ்டிஎல்சி மற்றும் சாப்ட்வேர் டெஸ்ட்டிங் கான்செப்ட்ஸ்கள் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

Object Orriented Programming கான்செப்ட்டுகள், டெஸ்ட் ஆட்டோமேஷன் ஸ்கிரிப்ட் டெவலப்மென்ட் பற்றிய அறிவு இருக்க வேண்டும். அதேபோல் ஆர்டிபிஎம்எஸ் கான்செப்ட்டுகள் (RDBMS Concepts) மற்றும் டேட்டா குயரிங் ஸ்கில்ஸ்(Data Querying Skills) தெரிந்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாகும். மேலும் ஆட்டோமேஷன் டாஸ்க்ஸ், Manual QA டாஸ்க்கில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

ட்ரபுள்சூட்டிங் மற்றும் டீபக்கங் டெஸ்ட் கேசன், பிக்சிங் எரர்ஸ் தெரிந்திருக்க வேண்டும். எக்ஸிக்கியூட்டிங்/டெஸ்ட்டிங் கேசஸ், அனலிசிஸ் டெஸ்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டீம் பிளேயராகவும், தனிப்பட்ட நபராகவும் பணியாற்றும் திறன் இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக Agile Methodology, GIT, CI/CD, pipelines & exposure to jenkins or cicle CI உள்ளிட்டவை தெரிந்திருந்தாலோ அல்லது Selenium, BDD, security testing, performance testing with Jmeter தெரிந்திருந்தாலும் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் Remote முறையில் பணியாற்றலாம். அதாவது அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். தற்போதைய அறிவிப்பில் மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Numerator இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+