ஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையே மாறிடும்.. ஓமன் நாட்டில் வேலை! கைநிறைய சம்பளம்! OMCL கொடுத்த ஆஃபர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/Moulding/ Process Control & CNC Operator), Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection), Maintenance (Exposure in Mechanical /Electrical Maintenance) பணிக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது.

Oman Jobs

போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.

வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," ஓமன் நாட்டில் பணிபுரிய (exposure in Foundry area or Manufacturing Industries) Diploma (background) or ITI (background) தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 Production (Exposure in Melting/Moulding/Process Control) & CNC Operator, Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection) w Maintenance (Exposure in Mechanical/Electrical Maintenance) श्री शुकन தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாதவருமானம் குறைந்தபட்சம் ரூ. 44,000/- முதல் ரூ.54,000/ வரை ஊதியமாக வழங்கப்படும்.

மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட செல்பவர்கள் விசா பணிக்கு கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo ஆகியவற்றை 11.10.2026 தேதிக்குள் அனுப்பவும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப்எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+