கிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா? 'ஒன்இந்தியா தமிழ்' வழங்கும் அருமையான வாய்ப்பு!
சென்னை: எழுத்தாற்றல் உள்ளவரா, கிரியேட்டிவாக எழுதுவீர்களா, எழுத்தில் சாதிக்கும் தாகம் கொண்டவரா.. அப்படியானால், நமது ஒன்இந்தியாதமிழ் செய்தி தளத்தில், ஃப்ரீலேன்ஸ் அடிப்படையிலான வாய்ப்பு வந்துள்ளது.
அரசியல், கிரைம், சமகால நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் செய்தி/கட்டுரை எழுதி அனுப்பலாம்.

துவங்கும் முன்பாக நீங்கள் அறிய வேண்டிய தகவல்:
பயனுள்ள, சிறந்த தரமுள்ள கட்டுரைகள்: கட்டுரை எழுத நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயம், கவரும் வகையிலும், அர்த்தம் பொதிந்த தலைப்புகளை கொண்டதாகவும், விஷயம் உள்ள கட்டுரையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ அதுபற்றி வாசகர்கள் புதிதாக நிறைய அறிந்துகொள்ளும் வகையில் கட்டுரை இருக்க வேண்டும். எழுத்தில் தெளிவும், அறிவுப்பூர்வ விஷயமும் (இலக்கண பிழை கூடாது) இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
காப்பியடித்தலுக்கு நோ-நோ: பிற வெப்சைட்டோ அல்லது வேறு மூலங்களில் இருந்தோ கட்டுரை காப்பி செய்யப்பட்டதாக இருக்கவே கூடாது.

கட்டுரை வடிவம்: எழுத்து நடை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 700 வார்த்தைகள் இருப்பது அவசியம். (எஸ்எம்எஸ் மெசேஜ்களில் பயன்படுத்துவதை போன்ற வார்த்தை பிரயோகம் கூடாது)
ஏற்கனவே நமது வெப்சைட்டில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் கருப்பொருளை கொண்டே மீண்டும் கட்டுரை வழங்க கூடாது. வாசகர்களுக்கு போரடிக்கும் உணர்வை அது தரும் என்பதால் இந்த கட்டுப்பாடு. ஏற்கனவே பிரசுரமான கட்டுரையா என்பதை அறிய வெப்சைட்டின் மேல்பகுதியில் உள்ள சர்ச் ஆப்ஷனை பயன்படுத்தி அறியலாம்.
நீங்கள் ஏன் எங்களுக்காக எழுத வேண்டும் என கேட்கலாம்? உங்களது எழுத்து திறமையை காண்பிக்க இது ஒரு சரியான இடம். கணிசமான வருவாயையும் நீங்கள் பெற முடியும். உங்களது கட்டுரை அதிகப்படியானோரால் வாசிக்கப்பட்டால் உங்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
உங்களுக்கு எழுத ஆர்வமுள்ள விஷயம் எது என்பதையும் எங்களுக்கு தெரிவியுங்கள்.
தொடர்புக்கு: www.lekhaka.com
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications