ஒரே வருஷத்தில் வாழ்க்கை மாறிடும்! சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு! கைநிறைய சம்பளம்.. தேதியை நோட் பண்ணுங்க
சென்னை: மலேசியாவில் பணிபுரிய QC INSPECTOR, PIPING ENGINEER, PLANNING ENGINEER, TENDERING ENGINEER, PIPING FOREMAN, PIPE FITTER மற்றும் TIG & amp; ARC WELDER CS தேவைப்படுகிறார்கள் எனவும், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளது.
OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது.
போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.

வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது. அந்த வகையில், மலேசியாவில் பணிபுரிய QC INSPECTOR, PIPING ENGINEER, PLANNING ENGINEER, TENDERING ENGINEER, PIPING FOREMAN, PIPE FITTER மற்றும் TIG & amp; ARC WELDER CS தேவைப்படுகிறார்கள் எனவும், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," மலேசியாவில் பணிபுரிய (Oil & Gas field) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E & BTECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 முதல் 42 வயதிற்கு உட்பட்ட QC Inspector (Cswip 3.1) பணிக்கு மாத வருமானம் ரூ. 70,00080,000/- Plping Engineer பணிக்கு ரூ.60,000-80,000/- Planning Engineer (Primavera P6) ली 5 70,000-84,000/- Tendering Engineer பணிக்கு ரூ.70,000 76,000/-Plping Foreman பணிக்கு ரூ. 54,000-62,400/-ஆகும் மற்றும் TIG & ARC Welders CS பணிக்கு மாத வருமானம் ரூ.42,000-50,000/-& Pipe Fitter பணிக்கு ரூ. 38,000-50,000/- ஊதியமாக வழங்கப்படும். உணவு. விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். இப்பணிகளுக்கான நேர்காணல் 18.06.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது எனவே விருப்பம் உள்ளவர்கள் (Resume Passport Original & Copy) Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்
முகவரி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்), ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32 கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications