கோவில் வேலை கோடி புண்ணியம்..பழனி முருகன் கோவிலில் பணி..கை நிறைய ஊதியம்! நாளைதான் கடைசி..A to Z தகவல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு உட்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு முடித்தவர்கள் வரை 296 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தான் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழனி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

palani murugan temple

01.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் 45 வயதுக்குட்பட்ட தகுதியுடைய இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் - பணியிடங்கள்:

1.இளநிலை உதவியாளர் - 7
2. சீட்டு விற்பனையாளர் -13
3. சத்திரம் காப்பாளர்- 16
4.சுகாதார மேஸ்திரி (மலைக்கோவில்)- 2
5. சுகாதார மேஸ்திரி (அனைத்து உப நிறுவனங்கள்)-1
6. சுகாதார மேஸ்திரி (அனைத்து உப கோயில்கள்) -1
7. பூஜை/ காவல் (உபக்கோயில்)-1
8.காவல்-2
9. காவல் (உபக்கோயில் மற்றும் உப நிறுவனங்கள்- 44
10.துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்)- 54
11.துப்புரவு பணியாளர் (உப கோயில்கள் மற்றும் உப நிறுவனங்கள்)- 104
12.கால்நடை பராமரிப்பு -2
13.உதவி யானை மாவுத்தர்-1
14. சுகாதார ஆய்வாளர்-1
15. உதவி பொறியாளர் (மின்னணுவியல்)-1
16. உதவி பொறியாளர் (சிவில்)-4
17. இளநிலை பொறியாளர் (மின்) -1
18.இளநிலை பொறியாளர் (ஆட்டோ மொபைல்)-1
19.இளநிலை பொறியாளர் (மெக்கானிக் ரோபோடிக்ஸ்)-1
20.மேற்பார்வையாளர் (சிவில்)- 3
21.மேற்பார்வையாளர் (இயந்திரவியல்)-3
22.தொழில்நுட்ப உதவியாளர் (மின்)-2
23.தொழில்நுட்ப உதவியாளர் (டிஇசிஇ)-1
24. தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்)-1
25.கணினி இயக்குபவர் - 3
26.ஆய்வக நுட்புனர் (பஞ்சாமிர்தம்)-1
27. வின்ச் ஆப்பரேட்டர் -1
28. மிஷின் ஆப்ரேட்டர்-1
29. மிஷின் ஆபரேட்டர் (பஞ்சாமிர்தம்)- 1
30. ஹெல்பர்-2
31.ஹெச்டி ஆபரேட்டர் -1
32.ஓட்டுநர்-2
33.ஆகம ஆசிரியர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி -1
34.அத்தியான பட்டர் (மலைக்கோயில்-1
36. அர்ச்சகர் (உப கோயில்)-2
37. நாதஸ்வரம்- 2
38.தவில் (உபக்கோயில்)-2
30.தாளம் (உபக்கோயில்)-5
31.மாலை கட்டி-1

-மொத்தமாக 296 பணியிடங்கள்.

ஊதிய விபரம்: மாலை கட்டி தொடங்கி பொறியாளர் பதவி வரை பணிக்கும் தகுதிக்கும் ஏற்றபடி ஊதியம் வழங்கப்படுகிறது. 18,500 முதல் 58,600 வரையிலும், பொறியியல் பொறியாளர் தகுதி கொண்ட பணியிடங்களுக்கு 36 ஆயிரம் முதல் 1 லட்சத்து 16 ஆயிரம் வரையும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஓட்டுனர் பணிக்கு 18,500 முதல் 58,600 வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பில், டிப்ளமோ, பிஇ வரை படித்தவர்களாக இருக்க வேண்டும். இதற்காக https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

வயது: விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 45 வயது உடற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி? : விண்ணப்ப படிவம், தகுதிகள் மற்றும் இதர விவரங்களை www.hrce.in.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இனையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய நகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ 05.12.2024ம் தேதி முதல் 08.01.2025ம் தேதி வரை மாலை 5,45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். மேற்படி தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.- இணை ஆணையர்/ செயல் அலவலர்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம். - 624 601.

நிபந்தனைகள்

1. விண்ணப்பதாரர் 01.07.2024-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும். 45 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

2. இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

4. இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

5. விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார். வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

6. விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும்.

7. விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும், பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

8. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும். உபநிறுவனங்களுக்கும் பணியிட மாறுதல் செய்யப்படுவார்.

9. பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

10. விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

11. நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும், வழங்கப்படமாட்டாது.

12. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும்.

13. விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்தும், சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவர்.

14. நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோயிலிருந்து எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாது.

15. விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உண்மைத் தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

16. அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள். இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
17. உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் நிராகரிக்கப்படும்.

18. பணிநியமனம் அரசாணை எண்.114 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அ.நி.4-2) நாள். 03.09.2020 விதிகளுக்குட்பட்டது. அரசாணை எண்.219 சுற்றுலா. பண்பாடு மற்றும் விதிகளுக்குட்பட்டது. அறநிலையங்கள் (অ.4-2) .02.09.2022

19. அரசாணை (நிலை) எண். 114 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அ.நி.4- 2) துறை )நாள். 03.09.2020 விதி எண் 9-ன்படி முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரியும் தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

20. தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி. அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

21. விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in அல்லது www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

22. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் பணியிட வரிசை எண். மற்றும் ". பணியிடத்திற்கான விண்ணப்பம்" என தெளிவாக குறிப்பிட்டு "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் 624 601" என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

23. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 08.01.2025 பிற்பகல் 5.45 மணிக்குள்.

palani murugan temple
palani murugan temple
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+