பழனி முருகன் கோயிலில் மெகா வேலைவாய்ப்பு.. 296 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது.. உடனே விண்ணப்பிங்க
சென்னை: பழனி முருகன் கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 296 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 8-ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பி இ/ பிடெக் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ண்ப்பிக்க கடைசி நாள் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடவும்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயிலான பழனி முருகன் கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளின் ஒன்றான பழனி முருகன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்ள் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நிரப்பப்படுகிறது.

அதன்படி கடந்த மாதம் பழனி முருகன் கோயிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ண்ப்பிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ளது. எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடவும்.
பணியிடங்கள் விவரம்:
* இளநிலை உதவியாளர் - 7
* சீட்டு விற்பனையாளர் -13
* சத்திரம் காப்பாளர்- 16
* சுகாதார மேஸ்திரி (மலைக்கோவில்) - 2
* காவல் - 2
* காவல் (உபக்கோயில் மற்றும் உப நிறுவனங்கள் - 44
* துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) - 54
* துப்புரவு பணியாளர் (உப கோயில்கள் மற்றும் உப நிறுவனங்கள்) - 104
* உதவி பொறியாளர் (மின்னணுவியல்) - 1
* உதவி பொறியாளர் (சிவில்) - 4
* இளநிலை பொறியாளர் (மின்) - 1
* இளநிலை பொறியாளர் (ஆட்டோ மொபைல்) - 1
* மாலகட்டி - 05
என 39 வகையான பணியிடங்களில் மொத்தம் 296 காலியிடங்கள் நிரப்பப்டுகின்ற்ன.
கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பி இ/ பிடெக் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வாட்ச்மேன், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத படிக்க தெரிந்தால் மட்டும் பொதும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பை பொறுத்தவரை 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: பணியிடங்களுக்கு தகுந்தபடி சம்பளம் மாறுபடும். இளநிலை உதவியாளர் பணிக்கு ரூ.18,500- 58,600 வரையும், இன்ஜினியர் கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு ரூ.36,700- 1,16,200-வரையும் வழங்கப்படும். வாட்ச்மேன் பணிக்கு ரூ.15,900- 50,400-வரை சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in- என்ற திருக்கோயில் இணையதளத்தில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அல்லது கோவில் அலுவலகத்தில் ரூ. 50 செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை விண்ணப்பிக்கும் பணியின் பெயர், வரிசை எண் ஆகியவற்றினை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனி,
திண்டுக்கல் மாவட்டம் - 624601
என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.01.2025- மாலை 5.45 மணிக்குள்.. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால் ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் மறக்காமல் விண்ணப்பித்து விடுங்கள்..
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php














Click it and Unblock the Notifications