பிளஸ் 2 படித்தவர்கள் .. மலையாளிகள் பாணியில் ஐரோப்பாவில் செட்டில் ஆகலாம்.. நெட்டிசன் சூப்பர் ஐடியா
சென்னை: உங்கள் மகளை 12ம் வகுப்பு படிக்க வைத்துள்ளீர்கள் என்றால், வாய்ப்பிருந்தால் பிஎஸ்சி நர்சிங் படிக்க வையுங்கள்.. நமது நாட்டில் 2 வருடம் வேலை செய்தால், பின்னர் வளைகுடா நாடுகளுக்கு எளிதாக வேலைக்கு போகலாம். அங்கு சில காலம் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தால். பின்னாளில் ஐரோப்பாவில் சூப்பராக செட்டில் ஆகலாம் என்று நெட்டிசன் ஒருவர் சூப்பர் ஐடியா கொடுத்துள்ளார்.
ஏஐ ஆதிக்கம் காரணமாக இன்றைக்கு எந்த துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும், எந்த துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருக்கும் என்பது பலருக்கு சந்தேகம் இருக்கும்.. குறிப்பாக பிளஸ் 2 முடித்தவர்கள், அடுத்த அவர்கள் படிக்க போகும் படிப்பு தான் அவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.

பிளஸ் 2 முடித்த பின்னர், நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும் என்று பலரும் போராடுகிறார்கள். டாக்டர் ஆக முடியாதவர்கள், டாக்டருக்கு படிக்க வைக்க வசதி இல்லாதவர்கள், நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தங்கள் வாழ்க்கையே தொலைந்து போனதாக நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு..
கேரள மக்களின் முயற்சிகளும் சரி, கேரளா குறித்து கேள்விப்பட்ட தகவல்களும் சரி, பெரும் வியப்பை தருகிறது. அவர்கள் எங்கு நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கிறது.. அதற்கு எப்படி போக வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கு திட்டமிட்டு செயல்படுவார்கள். வெறும் அரசு வேலைகளை நம்பி மட்டும் இருக்காமல், புதிய வேலைவாய்ப்புகள் எங்கிருந்தாலும் தேடி செல்வார்கள். மாநிலம் விட்டு மாநிலம் மட்டுமின்றி, நாடு விட்டு நாடு மட்டுமினறி, கண்டம்விட்டு கண்டம் கூட பறப்பார்கள்.
தேனி மாவட்டத்திற்கு பக்கத்தில் உள்ள மாவட்டம் தான் இடுக்கி மற்றும் கோட்டயம், கடவுளின் தேசம் என்று அழைக்கப்பட இந்த மாவட்டங்களில் உள்ள கொள்ளை அழகு மிக முக்கிய காரணம்.. இந்த ஊரைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் செட்டில் ஆகிவிட்டார்கள். அங்கு கிராமங்களில் பல வீடுகள் பூட்டிக்கிடக்கும்.. இந்த இரண்டு மாவட்டத்தினர் மட்டுமல்ல, கேரளாவின் பல்வேறு கிராமங்கள், நகரங்களில் வெளிநாட்டில் வேலை செய்வோர் அதிகம்..
ஆனால் தேனி, மதுரை பக்கம் உள்ள நம்ம ஊரில் உள்ளவர்களை பார்த்தால், தெருவில் 10 பேர் திருப்பூரிலும், 8 பேர் கோவையிலும் வேலை செய்வார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி பக்கம் வீட்டில் தெருவில் 10 பேர் சென்னையில் வேலை செய்வார்கள்.. இதுதான் நம்ம ஊருக்கும் கேரளாவிற்குமான வித்தியாசம்.
சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், வளைகுடா நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சியை புரிந்து கொண்ட கேரள மக்கள், அங்கு தாங்கள் போவதுடன், தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் செட்டில் ஆகவும் வழிகாட்டுகிறார்கள். அவர்களின் சரியான வழிகாட்டுதல் காரணமாக வளைகுடா நாடுகள் முழுக்க கேரள மக்கள் தான் பெரும்பாலான பணிகளிலும், உயர்ந்த நிர்வாகத்திலும் இருக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

கேரளாவில் பிளஸ் 2 முடித்த ஏழை பெண்களை பொறுத்தவரை உடனே நர்சிங் படிக்கிறார்கள். நம்மூரில் சில காலம் வேலை செய்த பின்னர் வளைகுடா நாடுகளில் சில காலம் போய் வேலை செய்கிறார்கள்.. அதன்பின்னர் 4 வருடங்களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.. இதுபற்றி வளைகுடாவில் வேலை செய்யும் கென் என்ற நெட்டிசன் சூப்பர் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "12 ஆம் வகுப்புக்குப்பிறகு வாய்ப்பிருக்கும் பெண் குழந்தைகளை BSC Nursing படிக்க வையுங்கள். வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு போவதற்கு 2 ஆண்டுகள் ஊரில் நர்சாக வேலைப்பார்த்த அனுபவம் போதும். அங்கும் 2-4 ஆண்டுகள் அனுபவம் பெற்றால் போதும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலையுடன் கூடிய இடப்பெயர்வுக்கு உதவும். மலையாளிகளின் மகோன்னத வழி :நர்ஸ் படிப்பும் ,அதன் வழியான தன்னம்பிக்கை வேலை வாய்ப்பும் ,கண்டங்களின் இடப்பெயர்வும்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications