நோ எக்ஸாம்! 10-ம் வகுப்பு மார்க் போதும்.. போஸ்ட் ஆபீஸ் வேலை! தமிழகத்தில் 2,292 பணியிடம்! இன்றே கடைசி
சென்னை: இந்தியன் போஸ்ட் ஆபீசில் உள்ள 21,413 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இதில் தமிழகத்தில் உள்ள 2,292 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தேர்வு எதுவும் கிடையாது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து விடுங்கள்.
இந்திய அஞ்சல் துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகிறது. இந்தியன் போஸ்ட் ஆபீஸ் எனப்படும், தமிழகம் உள்பட அஞ்சல் துறையில் ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. மொத்தம் உள்ள 21,413 பணியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் (BPM), அஸ்சிஸ்ண்டன் பிரஞ்ச் போஸ்ட் மாஸ்டர் (ABPM), டக் சேவக் என தமிழகத்தில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது போக உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். மேலும் கணினி பற்றிய அறிவும் இருக்க வேண்டும். இதேபோன்று சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். தேர்வு எதுவும் கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு: 18 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகள் என்றால் 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
பிரஞ்ச் போஸ்ட் மாஸ்டர் - ரூ.12,000 - ரூ.29,380/-
உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ABPM / Dak Sevak - ரூ.10,000 - ரூ.24,470/-
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி /எஸ்.டி உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
எப்படி விண்ணப்பிப்பது?: விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன்பு தேர்வு அறிவிப்பினை நன்கு படித்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று தேர்வர்கள் தங்கள் விரும்பிய மாநிலத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்துவிடுங்கள்.
தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.gov.in/ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications