ரெடியா? ரூ.81,100 வரை மாதசம்பளம்! தபால் துறையில் 1,899 காலியிடங்கள்.. தமிழ்நாட்டிலும் பணி வாய்ப்பு
சென்னை: தபால் துறையில் 5 பிரிவுகளில் காலியாக உள்ள 1,899 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். இப்படி பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டிலும் வேலையை பெற முடியும்.
மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால்(அஞ்சல்) துறை இயங்கி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவ்வாறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பின் பல்வேறு முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: தபால் துறையில் Postal Assistant பணிக்கு 598 பேர், Sorting Assistant பணிக்கு 143 பேர், Postman பணிக்கு 585 பேர், Mail Guard பணிக்கு 3 பேர், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 570 பேர் என மொத்தம் 1,899 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தமட்டில் போஸ்டல் அசிஸ்டென்ட் பணிக்கு 110 காலியிடங்கள், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு 19 காலியிடங்கள், போஸ்ட்மேன் பணிக்கு 108 காலியிடங்கள், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 124 காலியிடங்கள் என மொத்தம் 361 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு: போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட்மேன், மெயில் கார்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
மாதசம்பளம்: போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிகளுக்கு மாதசம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். மல்டி டாஸ்க்கிங் பணிக்கு மாதசம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.
கல்வி தகுதி: Postal Assistant, Sorting Assistant பணிக்கு டிகிரியும், போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12ம் வகுப்பும், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10ம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். அதாவது இன்டர்நேஷனல், நேஷனல், இன்டர்யூனிவர்சிட்டி, பள்ளி அளவிலான தேசிய விளையாட்டு போட்டி, பள்ளி அளவிலான மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை இருக்க வண்டும். மேலும் National Physical Efficiency Drive என்பதன் கீழ் தேசிய விருது பெற்றவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், 3ம் பாலினத்தவர்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://dopsportsrecruitment.cept.gov.in/ எனும் இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் 9 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிய Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications