நோ எக்ஸாம்.. ரூ.40,000 டூ ரூ.1.60 லட்சம் வரை சம்பளம்.. மின் துறையில் சூப்பர் வேலை! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மத்திய அரசின் பிஜிசிஐஎல் நிறுவனத்தில் தேர்வு இன்றி மாதம் ரூ.40 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரையிலான சம்பளத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளது. இந்த பணிக்கு என்ஜினீயரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய மின்சாரத்துறையின் கட்டுப்பாட்டில் பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (பிஜிசிஐஎல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் மாநிலங்களுக்கு மின்சாரங்களை பகிர்ந்து வழங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் என்பது ஹரியானா மாநிலம் குர்க்கிராமில் அமைந்துள்ளது.

மேலும் பல இடங்களில் பிஜிசிஐஎல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் பிஜிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: பிஜிசிஐஎல் நிறுவனத்தில் தற்போது என்ஜினீயர் டிரெய்னி பணிக்கு மொத்தம் 4 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன்படி என்ஜினீயர் டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பிரிவுக்கு 144 பேர், என்ஜினீயர் டிரெய்னி (சிவில்) பிரிவுக்கு 28 பேர், என்ஜினீயர் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவுக்கு 6 பேர், என்ஜினீயர் டிரெய்னி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பிரிவுக்கு 6 பேர் என மொத்தம் 184 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது என்பது 10.11.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
கல்விதகுதி: என்ஜினீயர் டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் (பவர்), எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் என்ஜினீயரிங், பவர் என்ஜினீயரிங் (எலக்ட்ரிக்கல்) படிப்பை முடித்திருக்க வேண்டும். என்ஜினீயர் டிரெய்னி (சிவில்) பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் சிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
என்ஜினீயர் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். என்ஜினீயர் டிரெய்னி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயர், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஓராண்டு பயிற்சி காலமாகும். அப்போது ரூ.40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். பயிற்சியை முடித்த பிறகு மாதம் குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் மாதம் 11ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 2023ம் ஆண்டு கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு குரூப் டிஸ்கஷன், நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications