செய்தி வாசிப்பாளர்.. பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை இருக்கு.. என்ன தகுதி? உடனே விண்ணப்பிங்க
சென்னை: செய்தி வாசிப்பாளர், டிரான்ஸ்லேட்டர், கேசுவல் எடிட்டர் பணிகளுக்கு பிரசார் பாரதி நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Casual Editor, Casual News Reader-cum-Translator ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Graduate Degree, PG Diploma / Degree (Journalism) முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரசார் பாரதி நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தது 21 வயது எனவும் அதிகபட்சம் 50 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக SC / ST / OBC - ரூ.266/- மற்ற நபர்கள் - ரூ.354/- செலுத்த வேண்டும்.
https://prasarbharati.gov.in/pbvacancies/
https://prasarbharati.gov.in/wp-content/uploads/2024/01/Advt-for-CE-and-CNRTAssamese-iro-RNU-Guwahati-11-Jan-2024-14-00-32.pdf
விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 27.01.2024 தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.












Click it and Unblock the Notifications