ரோஸ்கர் மேளா' திட்டம்! 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி
டெல்லி: 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் 'ரோஸ்கர் மேளா' திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் அமைச்சகங்களில் வரும் 2025ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில், இதனை ஓர் இயக்கம் போல கொண்டு செல்ல வெண்டும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இது 'ரோஸ்கர் மேளா' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Addressing the Rozgar Mela. Congratulations to the newly inducted appointees. https://t.co/MLd0MAYOok
— Narendra Modi (@narendramodi) June 13, 2023
இந்த திட்டத்தின்படி அவ்வப்போது இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். தற்போது இதன் தொடர்ச்சியாக இன்று சுமார் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பணி ஆணைகளை வழங்கியுள்ளார். ஆணையை பெற்ற இளைஞர்களிடம் கலந்துரையாடிய அவர், "சில அரசியல் கட்சிகள் அரசு வேலைக்காக விலையை நிர்ணயித்துள்ளன. ஆனால் பாஜக அப்படியான கட்சி அல்ல.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் நாங்கள் கவனமுடன் செயல்பட்டு வருகிறோம். அவர்களின் கனவுகளுக்காக நாங்கள் உழைக்கிறோம். அதேபோல நாட்டில் நிலையான ஆட்சி அதிகாரம் நீடித்து இருக்கவும் பாடுபட்டு வருகிறோம். தற்போது நமது நாட்டில் நிலையான அரசியல் சூழல் நிலவுகிறது. எந்த குழப்பமும், அதிருப்தியும் இல்லை. ஆனால் முந்தைய அரசாங்கங்கள் அப்படி இல்லை. பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் என ஏராளமான குற்றச்சாட்டுகள் முந்தைய அரசின் மீது இருந்தன" என்று கூறியுள்ளார்.

இந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் கர்மயோகி பிரம்ப் மூலம் பயிற்சிகளை பெறுவார்கள். நாடு முழுவதுமிருந்து நிதிச் சேவைத் துறை, அஞ்சல், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அணுசக்தி, ரயில்வே அமைச்சகம், தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் போன்ற துறைகளுக்கு பணியாற்ற இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 16ம் தேதி இதே போல சுமார் 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications