சென்னையிலேயே ஐடி வேலை.. பணி அனுபவம் தேவையில்லை.. நல்ல சான்ஸ்! அழைக்கும் பிரபல நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று ப்ரோபெல் டெக்னாலஜி சொல்யூஷன் (Propel Technology Solution) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் சென்னை போரூரில் அமைந்துள்ளது.

Propel Technology Solution Hiring 2024 for Quality Engineer in Chennai


இந்த நிறுவனத்தில் தற்போது குவாலிட்டி என்ஜினியர் (Quality Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Block Box, White Box, Gray Boxt Testing உள்ளிட்ட மேனுவல் டெஸ்ட்டிங் டெக்னீக்ஸ் தெரிந்திருந்து வைத்திருக்க வேண்டும். அதோடு இளங்கலை பட்டப்படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதுசார்ந்த பிரிவில் முடித்து சாப்ட்வேர் சர்வீஸ் பிரிவில் 0 முதல் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

‛‛வொர்க் ஃப்ரம் ஹோம்’’ வாய்ப்பு.. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்.. மிஸ் பண்ணாதீங்க.. ரெடியா?

இதுதவிர Selenium, Junit, TestNG உள்ளிட்ட ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் டூல்ஸில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Bug டிராக்கிங் டூல்ஸ் Asure DevOps, JIRA பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் மிஸ்டேக் இன்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், எஸ்டிஎல்சி பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் குறித்த அறிவிப்பு எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படலாம். அதுமட்டுமின்றி இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 5ம் தேதி வெளியானது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என்ன என்று குறிப்பிடவில்லை.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே propel Technology Solution நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பம் செய்வது நல்லதாகும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+