ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் வேலை! 642 பணியிடங்கள்.. ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம்! சூப்பர் வாய்ப்பு
சென்னை: ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்திய ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) ஆகும். ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த நிறுவனம் சரக்கு வழித்தடங்களின் திட்டமிடல், கட்டுமானம், மேம்பாடு மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் மேனேஜர் (ஃபைனான்ஸ்) - 03
எக்ஸ்கியூட்டிவ் (சிவில்) - 36
எக்ஸ்கியூட்டிவ் (எலக்ட்ரிக்கல்) - 64
எக்ஸ்கியூட்டிவ் (சிக்னல் & டெலி கம்யூனிகேஷன்) - 75
மல்டி டாஸ்க்கிங் - 464 என மொத்தம் 642 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* ஜூனியர் மேனேஜர்: நிதி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் சிஏ / சிஎம்ஏ உள்ளிட்ட பட்டயகணக்கியல் துறை படிப்பை முடித்து இருக்க வேண்டும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.50,000- 1,60,000 வரை வழங்கப்படும்.
* எக்சியூட்டிவ்: சிவில் பணிக்கு சிவில் இன்ஜினியரிங் அல்லது மூன்று ஆண்டு சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். அதேபோல எலக்ட்ரிக்கல் பணிக்கு எலக்ட்ரிக்கல் துறையில் இன்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும்.
* மல்டி டாஸ்க்கிங் பணி: மல்டி டாஸ்க்கிங் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அப்ரெண்டீஸ் பயிற்சி அல்லது ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ 16 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
18 வயது முடிந்தவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம. மல்டி டாஸ்க்கிங் பணிக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும். அரசு நிர்ணயித்த விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. தேர்வுக்கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்டி ஆகிய பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. எம்.டிஎஸ் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.500 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை:
இரண்டு கட்ட கண்ணி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு (எம்.டிஎஸ் பணிக்கு மட்டும்), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் 22.03.2025 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது) ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்த பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://dfccil.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cdn.digialm.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/12/1115587575157008567157.pdf .
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications