அரசு வேலை தான் கனவா.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. 327 பணியிடங்கள்! புதுவை அரசு அறிவிப்பு
சென்னை: புதுவை அரசு துறைகளில் காலியாக இருக்க கூடிய 327 காலிப்பணியிடங்களை நிரப்ப புதுவை சிஜிஎல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுவையில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுவை (CGL) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்க கூடிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்களுக்கு புதுவையில் வசிக்க கூடியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் புதுவையில் 5 ஆண்டுகள் வசித்து வருபவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:
* புள்ளியியல் ஆய்வாளர் - 26
* நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் - 25
* வேளாண் அலுவலர் - 23
* தொழில்நுட்ப அலுவலர் - 19
* வேளாண் அலுவலர் (பொறியியல்) - 05
* வேளாண் அலுவலர் (நீர்வளவியல்) - 05
* உயர்நிலை எழுத்தர் - 197
* கள மேற்பார்வையாளர் - 27
என மொத்தம் 327 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
* புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு பொருளாதாரம், புள்ளியியல், கணிதவியல் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
* நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணிக்கு நூலக அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
* விவசாய அதிகாரி பணிக்கு தோட்டக்கலைத்துறையில் பட்டம் முடித்து இருக்க வேண்டும்.
டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ரஷனல், புரடெக்ஷன் இன் ஜினியரிங், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் படித்து இருக்க வேண்டும்.
* உயர் நிலை எழுத்தர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தால் போதும்.
வயது வரம்பு:
புள்ளியியல் ஆய்வாளர் - 32 வயது வரை (அதிகபட்சம்)
நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் - 30 வயது
வேளாண் அலுவலர் - 30
தொழில்நுட்ப அலுவலர் - 30
வேளாண் அலுவலர் (பொறியியல்) - 30
வேளாண் அலுவலர் (நீர்வளவியல்) - 30
உயர் பிரிவு எழுத்தர் - 32
கள மேற்பார்வையாளர் - 30
அரசு விதிமுறைகளின் படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்; 14.12.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://recruitment.py.gov.in/recruitment/AOH2025/RenderNotification
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications