ரூ.81,000 வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவரா நீங்கள்.. தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை
சென்னை: புனேவில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 198 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,000 முதல் ரூ.81 ஆயிரம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் என்டிஏ எனும் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி (National Defence Academy or NDA) செயல்பட்டு வருகிறது. இந்திய ஆயுதப்படைகளில் கூட்டு பாதுகாப்பு சேவைக்கான பயிற்சி மையமாக இது விளங்கி வருகிறது.

இங்கு நம் நாட்டின் ராணுவம், கடற்படை, விமானபடையை சேர்ந்தவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில் தான் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் (தேசிய பாதுகாப்பு அகாடமி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
காலியிடங்கள்: தேசிய பாதுகாப்பு அகாடமியில் 14 பிரிவுகளில் மொத்தம் 198 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 16 பேர், ஸ்டெனோகிராபர் (கிரேட் II) பணிக்கு ஒருவர், டிராட்ஸ்மேன் (Draughtsman) பணிக்கு 2 பேர், சினிமா ப்ரோஜெக்னனிஸ்ட II (Cinima Projectionist- II) பணிக்கு ஒருவர், சமையல் தொழிலாளி பணிக்கு 15 பேர், காம்போசிடர் -பிரிண்டர் (Compositor - Printer) பணிக்கு ஒருவர், சிவிலியன் மோட்டார் டிரைவர் (ஓஜி - Civilian Motor Driver OG) பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் கார்பென்டர் பணிக்கு 2 பேர், ஃபயர்மேன் பணிக்கு 2 பேர், டெக்னீக்கல் அட்டென்டென்ட் பாகர் அன்ட் கான்பெக்சனர் பணிக்கு ஒருவர், டெக்னீக்கல் அட்டென்டென்ட் சைக்கிள் ரிபேரர் பணிக்கு 2 பேர், டெக்னீக்கல் அட்டென்டென்ட் பிரிண்டிங் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு ஒருவர், டெக்னீக்கல் அட்டென்டென்ட் பூட் ரீபேரரர் பணிக்கு ஒருவர், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் ஆபிஸ் மற்றும் டிரெய்னிங் பணிக்கு 151 பேர் என 198 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 12ம் வகுப்பு முடித்து நிமிடத்துக்கு இந்தியில் 35 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்து இந்தி, ஆங்கிலத்தில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். டிராட்ஸ்மேன், 12ம் வகுப்புடன் டிப்ளமோ டிராட்ஸ்மேன் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்டஸ்ட்ரீயல் டிரெய்னிங் இன்ஸ்ட்டியூட் டிராட்ஸ்மேன் சான்றிதழ் படிப்பை மடித்திருக்க வேண்டும்.
சினிமா ப்ரோஜெக்னனிஸ்ட பணிக்கு 12ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சமையல் தொழிலாளி பணிக்கு 12ம் வகுப்புட் சமையலில் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். காம்போசிடர் -பிரிண்டர் பணிக்கு 12 ம் வகுப்புடன் அந்த பிரிவில் 2 ஆண்டு அனுபவமும், சிவிலியன் மோட்டார் டிரைவர் (ஓஜி) பணிக்கு 12ம் வகுப்புடன் ஹெவி லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
கார்பென்டர் 12ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு அனுபவம் அல்லது கார்பென்டர் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஃபயர்மேன் பணிக்கு 10ம் வகுப்புடன் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மேம் தீயணைப்பு தொடர்பான 5 மாத சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னீக்கல் அட்டென்டென்ட் பணிக்கு 12ம் வகுப்புடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் ஆபிஸ் மற்றும் டிரெய்னிங் பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: லோவர் டிவிஷன் கிளர்க், ஸ்டெனோகிராபர், டிராட்ஸ்மேன், சினிமா ப்ரோஜெக்னனிஸ்ட II, சிவிலியன் மோட்டார் டிரைவர் (ஓஜி), ஃபயர்மேன் பணிகளுக்கு 18 முதல் 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். சமையல் தொழிலாளி, காம்போசிடர் -பிரிண்டர், கார்பென்டர் உள்பட பிற அனைத்து பணிகளுக்கும் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதுதவிர எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். மேலும் மற்றவர்களுக்கும் அரசு விதிகளின் படி வயது தளர்வு என்பது அளிக்கப்படும்.
மாதசம்பளம்: லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். ஸ்டேனோகிராபர், டிராட்ஸ்மேன் பணிகளுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். சினிமா ப்ரோஜெக்னனிஸ்ட II, சமையல் தொழிலாளி, காம்போசிடர் -பிரிண்டர், சிவிலியன் மோட்டார் டிரைவர் (ஓஜி), கார்பென்டர், ஃபயர்மேன் பணிகளுக்கு மாதம் ரூ.19,900 மதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். டெக்னீக்கல் அட்டென்டன்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் ஆபிஸ் மற்றும் டிரெய்னிங் பணிகளுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி மாதம் 16ம் தேதிக்குள் https://ndacivrect.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் திறனறி/ட்ரேட் தேர்வு மூலம் பணிக்கு ‛செலக்ட்' செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications