பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி வேலை.. 30 பணியிடங்கள்.. பிஇ, பிடெக் தகுதி தான்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 30 சிறப்பு அதிகாரி என்ஜினியரிங் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பி.இ மற்றும் பி.டெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. கடந்த 1894 ஆம் ஆண்டு லாகூர் நகரில் இந்த வங்கி தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும்.

Punjab National Bank Announces 30 Specialist Officer Engineering Vacancies for BE BTech Graduates

பணியிடங்கள் விவரம்:

அந்த வகையில் தற்போது 30 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சிவில் பொறியாளர் அதிகாரி (JMG Scale I) பிரிவில் 21 காலிப்பணியிடங்களும், மின் பொறியாளர் அதிகாரி (JMG Scale I) பிரிவில் 07 காலிப்பணியிடங்களும், மெக்கானிக்கல் பொறியாளர் அதிகாரி (JMG Scale I) பிரிவில் 02 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி

* கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, சிவில் பொறியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ./பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

சிவில் பொறியாளர் பணிக்கு ஒரு வருட பணி அனுபவம் கட்டாயமாகும். வணிக, குடியிருப்பு, நிறுவன, தொழில்துறை மற்றும் நிர்வாகக் கட்டிடங்களின் கட்டுமானம், புதுப்பித்தல், பழுதுபார்த்தல், உட்புற அலங்காரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* மின் பொறியாளர் பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ./பி.டெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.

மின் பொறியாளர் பணிக்கு குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் தேவை. கட்டிட கட்டுமானம், புதுப்பித்தல் அல்லது பராமரிப்பு ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், யு.பி.எஸ்., ஜெனரேட்டர்கள், மின் சேமிப்பு சாதனங்கள், ஏசி உபகரணங்கள், லிஃப்ட்கள் போன்ற மின் இயந்திர உபகரணங்களை நிறுவுதல், கையாளுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிலும் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

* மெக்கானிக்கல் பொறியாளர் பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ./பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் இருத்தல் அவசியம்.

மெக்கானிக்கல் பொறியாளர் பணிக்கு ஓராண்டு பணி அனுபவம் அவசியம். கட்டிட கட்டுமானம், புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யு.பி.எஸ். (UPS), ஜெனரேட்டர்கள், ஏசி (AC), லிஃப்ட்கள் உள்ளிட்ட அனைத்து மின் இயந்திர உபகரணங்களையும் நிறுவுதல், கையாளுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிலும் பணி அனுபவம் தேவை. (பணி அனுபவம் 05.05.2026 நிலவரப்படி கணக்கிடப்படும்).

வயது வரம்பு

வயது வரம்பை பொறுத்தவரை 05.05.2026 நிலவரப்படி கணக்கிடப்படும். சிவில், மின் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய மூன்று JMG Scale I அதிகாரி பணியிடங்களுக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 30 ஆண்டுகள் ஆகும்.

அரசு விதிகளின்படி, உச்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வும், பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி) வகுப்பினருக்கு (NCL) 3 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு பொதுப் பிரிவில் 10 ஆண்டுகளும், ஓ.பி.சி-க்கு 13 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி-க்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை:

பஞ்சாப் நேஷனல் வங்கியின் தேர்வு முறை இரண்டு படிநிலைகளைக் கொண்டது. தகுதியான விண்ணப்பதாரர்கள் முதலில் ஒரு ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கும், அதனைத் தொடர்ந்து தனிநபர் நேர்காணலுக்கும் அழைக்கப்படுவார்கள். இந்த இரண்டு கட்டத் தேர்வுகளின் அடிப்படையிலேயே இறுதித் தேர்வு நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். பகுத்தறிவு (25 கேள்விகள்), ஆங்கில மொழி (25 கேள்விகள்), எண்ணியல் திறன் (50 கேள்விகள்) மற்றும் தொழில்முறை அறிவு (50 கேள்விகள்) என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

விண்ணப்ப கட்டணம்

ஒவ்வொரு தவறான பதிலுக்கும், கேள்விக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்ணில் நான்கில் ஒரு பங்கு அபராதமாகக் குறைக்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 ஆப்ஷன்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தேர்வு மையங்களாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில்/கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மையத்தைத் தேர்வு செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும். பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), முன்னாள் ராணுவத்தினர் (Ex-s) மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.59/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.1180/- ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pnb.bank.in/recruitments.aspx மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு 21.04.2026 அன்று தொடங்கி 05.05.2026 அன்று முடிவடைகிறது. ஆன்லைன் எழுத்துத் தேர்வு 27.05.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://drive.google.com/file/d/1_xAa4madhprlYz_zloASp78paXJwz_c8/view

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+