டிகிரி + இன்ஜினியரிங் முடித்திருந்தாலே போதும்.. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை! சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் (Quardrant Technologies). இந்த நிறுவனம் என்பது தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் Cloud, Data & Analytics, Accessibility, Business Intelligence, Quality Testing, DevOps, AI & ML, CRM, ERP, Big Data மற்றும் Application Development உள்ளிட்ட முக்கிய பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டல் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோருக்கு Primary Skills ஆக Jaa, Spring, Boot, MVC, Hibernate மற்றும் SQL தெரிந்திருக்க வேண்டும். அதில் பணியாற்றி இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். கன்டரி ஸ்கீல்ஸாக எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் பணியாற்ற தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்டாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Debugging திறமை மற்றும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கான சம்பளம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Quadranttechnologies.com என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் இப்போதே விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications