Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே குரூப் டி தேர்வு.. அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்பு! பொன்னான வாய்ப்பு விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் ரயில்வேயில் குரூப் டி -இல் 22,195 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழக இளைஞர்களும் தயாராகி வரும் நிலையில் அவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பிற்கு எப்படி சேர்வது என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

மத்திய அரசின் மிகப்பெரிய நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. மொத்தம் 22,195 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

Railway Group D Exam Free Government Coaching for 22 195 Posts Don t Miss This Golden Opportunity

குரூப் டியில் 22,195 பணியிடங்கள்

10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் குரூப் 4 தேர்வு போல இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள். இந்த பணிகளுக்கான சம்பளத்தை பொறுத்தவரை ரூ.18 ஆயிரம் முதல் வழங்கப்படும்.

சம்பளம் போக இதர சலுகைகளும் வழங்கப்படும் என்பதால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் வசதிக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இலவச பயிற்சி வகுப்பு

ரயில் ஆள்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-டி தேர்விற்கான 22,195 காலிப்பணியிடங்கள் கொண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் 02.03.2026 ஆகும்.

எனவே, மேற்க்காணும் தேர்விற்காக வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் போட்டித் தேர்வர்கள் தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் இலவச மாதிரி தேர்வானது, அனுபவமிக்க சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 27.02.2026 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற உள்ளது.

இலவச வை-பை, நூலக வசதி

இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வலுவலகத்தில் பள்ளிப் பாடபுத்தகங்கள் உட்பட 3000க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, படிப்பக வசதி, இலவச Wi-Fi மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதிகள் போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.

சேர விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்

எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://rb.gy/xxudem இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, இவ்வலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இவ்வலுவலக தொலைபேசி எண் 04342-288890 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+