Railway job: உதவி லோகோ பைலட் வேலை.. ரயில்வே வெளியிட்ட மெகா அறிவிப்பு! 11,127 பணியிடங்கள்! தேர்வர்களே தட்டி தூக்குங்க
சென்னை: இந்தியன் ரயில்வேயில் உதவி லோகா பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்புடன் ஐடிஐ முடித்தவர்களும், டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவரகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக ரயில்வே உள்ளது. இந்தியாவில் அதிக ஊழியர்கள் பணியாற்றும் துறையாக உள்ள ரயில்வேயில் பணியாற்ற வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைப்பதால் எப்படியாவது ரயில்வே நடத்தும் போட்டி தேர்வுகளில் வென்று ரயில்வே ஊழியராக வேண்டும் என்று இளைஞர்கள் பலரும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

ரயில்வே வெளியிடும் தேர்வு அறிவிப்புகளில் மிக முக்கியமானதாக உதவி லோகோ பைலட் வேலையும் ஒன்றாக உள்ளது. தேர்வர்கள் எதிர்பார்த்த அந்த மெகா அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
காலிப்பணியிட விவரம்:
மொத்தம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நாடு முழுக்க பல்வேறு மண்டலங்களில் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக, மும்பை (CR) மண்டலத்தில் 1078 இடங்களும், செகந்திராபாத் (ECoR) பகுதியில் 824 இடங்களும், புவனேஷ்வர் (ECoR) மண்டலத்தில் 801 இடங்களும், சிலிகுரி (NFR) பகுதியில் 600 இடங்களும், அஜ்மீர் (NWR) மண்டலத்தில் 600 இடங்களும், குவாஹாட்டி (NER) பகுதியில் 676 இடங்களும், ராஞ்சி (SER) பகுதியில் 745 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மற்ற மண்டலங்களுக்கான காலியிட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் சென்னை (SR) மண்டலத்தில் 186 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் ஒரு நிரந்தர மத்திய அரசுப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் NCVT/SCVT அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக், வயர்மேன் போன்ற குறிப்பிட்ட வர்த்தகப் பிரிவுகளில் ஐடிஐ (ITI) சான்றிதழ் அல்லது பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
அல்லது மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் போன்ற பொறியியல் துறைகளில் மூன்று வருடி டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இன்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நேரத்தில் அனைத்துத் தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
உதவி லோகோ பைலட் பணிக்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது 30 (ஜூலை 1, 2026 நிலவரப்படி). பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC-NCL) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு லெவல் 2 ஊதிய விகிதத்தின்படி மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் முதல்நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-1), இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-2), கணினி அடிப்படையிலான திறனறிவுத் தேர்வு (CBAT), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற பல நிலைகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
CBT-1 மற்றும் CBT-2 தேர்வுகள் ஆங்கிலம், இந்தி உட்பட 15 மொழிகளில் (தமிழ் உட்பட) நடத்தப்படும். இருப்பினும், CBAT தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும். பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), பெண்கள், EBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையினர் போன்றோர் ₹250 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு முழுவதும் திரும்ப வழங்கப்படும். மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 கட்டணம் ( தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திரும்பப் வழங்கப்படும்) செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், 2026 மே 15 முதல் ஜூன் 14 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.rrbapply.gov.in/ க்குச் சென்று கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வை தேர்வு அறிவிப்பினை படிக்க: https://drive.google.com/file/d/1GBbeA3fRFzrCwJThqqlaLWk-6wMz0SrZ/view
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications