ரேஷன் கடை காலிபணியிடங்கள்.. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் உள்ள காலிபணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி பதிலளித்து பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறும் போது, நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

கூட்டுறவு துறை

கூட்டுறவு துறை

தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மூலம் நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

68 நிலையங்கள்

68 நிலையங்கள்

இதுவரை 19 மாவட்டங்களில் 68 நேரடி கொள்முதல் நிலையங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதுமேலும் விரிவு படுத்தப்படும்" இவ்வாறு ஐ பெரியசாமி கூறினார்.

என்ன தகுதி

என்ன தகுதி

இதனிடையே ரேஷன் கடையில் நிரப்பப்பட உள்ள விற்பனையாளர் (Sales Person), கட்டுநர் (Packer ) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை நிரப்பினாலும் சில தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். விற்பனையாளர் பணிக்கு
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவியாளர் பணி

உதவியாளர் பணி

அதேபோல் கட்டுநர் (Packer )​ பதவிக்கு மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் எடையாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு குறைந்தது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

எப்படி வாய்ப்பு

எப்படி வாய்ப்பு

விற்பனையாளர் பணிக்கு ரூ.12,000/- ஊதியமாக வழங்கப்படும். கட்டுநர் & எடையாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு ரூ.11,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பதவிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். எனினும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் எந்த வருடத்தில் இருந்து பதிவு செய்தவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் போது தான் தெரியும். நீண்ட வருடத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை தேர்வு செய்யும் முறை அறிமுகம் ஆகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+