மத்திய அரசு வேலை.. கை நிறைய சம்பளம்.. 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.. ரெடியா
சென்னை: மத்திய அரசின் மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள ஜுனியர் அஸிசிஸ்டண்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்து அறிவியல் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) - த்தில் காலியாக உள்ள 48 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்ட அதிகாரி, ஜூனியர் புரோகிராமர், ஜூனியர் அஸ்சிஸ்டண்ட், ஸ்டெனோகிராபர் என மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி என்ன.. வயது வரம்பு..சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்: துணை இயக்குனர் (மெடிக்கல்) 07 பணியிடங்கள், சட்ட அதிகாரி -01, ஜூனியர் புரோகிராமர் -06, ஜூனியர் அக்கவுண்டண்ட் 03, ஸ்டெனோகிராபர் 07, ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் 07 என மொத்தம் 48 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: துணை இயக்குனர் (மெடிக்கல்) பணியிடத்திற்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும். சட்ட அதிகாரி பணியிடத்திற்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் எல்.எல்.பி முடித்து இருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்த பிறகு மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசு, அரசு பொதுத்துறை நிறுவனம், சட்ட அமைப்புகள் போன்றவற்றில் பணியாற்றி இருந்தால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஜூனியர் புரோகிராமர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பி டெக்/ பி.இ/பிசிஏ/ ஐடி/ எலக்ட்ரானிக்ஸ், கணிணி சார்ந்த படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். ஜூனியர் அக்கவுண்டண்ட் பணியிடத்திற்கு பி.எஸ்.சி கணக்கு அல்லது புள்ளியியல் அல்லது பி.காம் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். அரசு நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் அக்கவுண்ட் தொடர்புடைய பணிகளை கையாண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஸ்டெனோ கிராபர்: ஸ்டெனோகிராபர் பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். ஷார்ஹேண்ட் /டைப்பிங் 80/30 W.P.M திறன் பெற்று இருக்க வேண்டும். அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் 2 முன் அனுபவம் இருந்தால் முன்னுரி அளிக்கப்படும்.
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட்: ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிணியை நன்றாக பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளது. அது குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: துணை இயக்குனர் (மெடிக்கல்), சட்ட அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற பதவியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 27-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.9.2023 முதல் www.natboard.edu.in என்ற இணையதளம் மூலமாக விண்னப்பிக்கலாம். வரும் 20.10.2023 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.1,500 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
கணிணி வழியிலான எழுத்துத்தேர்வு கணிணி திறன் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு அறிவிப்பை பார்க்க இங்கே https://natboard.edu.in/viewNotice.php?NBE=Qy9lV3QyZVNoTmlFUjVOTmQ3Y1Fndz09 கிளிக் செய்யவும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications