எழுத படிக்க தெரிந்தால் போதும்.. மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்.. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை
ராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு தகுதி, எழுத படிக்க தெரிந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக காலியாக உள்ள இரவுக்காவலர் காலிப்பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி , வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிட விவரம்: மண்டபம் மற்றும் ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சிஅலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (01) மற்றும் இரவு காவலர் (01) பணியிடங்கள் நிரப்படுகின்றன. திருவாடனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படி மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்தாலே போதும்.
சம்பளம் எவ்வளவு: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும். இனசுழற்சி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூத்தியானவர்களும் 32 வயது மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. ஓபிசி பிரிவினர் 34 வயது வரையும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வி, இருப்பிட சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றால் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/ தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 19.1.2024 ஆகும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. தேர்வு குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பானையில் தெரிந்து கொள்ளலாம்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications