Reserve Bank Job: ரிசர்வ் வங்கியில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா? 2 நாள் தான் டைம் இருக்கு
சென்னை: இந்தியன் ரிசர்வ் வங்கியில் (Reserve Bank Job) காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் (Office Attendant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 4 ஆம் தேதி தான் கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே மறக்காமல் விண்ணப்பிது விடுங்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 46 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவின் மைய வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது. நாணய கொள்கை வகுப்பது நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது என வங்கிகளின் வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ரிசர்வ் வங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதால் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் கிடைக்கின்றன.

ஆர்பிஐயில் வேலைவாய்ப்பு
இதனால் ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தால் போதும் லைஃப்பில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கருத்து தேர்வர்கள் மத்தியில் இருப்பதால் ரிசர்வ் வங்கி வெளியிடும் தேர்வு அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த சூழலில்தான், 572 பணியிடங்களை நிரப்ப ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைய போகிறது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர் - 572 பணியிடங்கள்
மண்டல வாரியாக:
அகமதாபாத் - 29
பெங்களூரு - 16
போபால் - 04
புவனேஸ்வர் - 36
சண்டிகர் - 02
சென்னை - 09
குவஹாத்தி - 52
ஹைதராபாத் - 36
ஜெய்ப்பூர் - 42
கான்பூர் மற்றும் லக்னோ - 125
கொல்கத்தா - 90
மும்பை - 33
புது டெல்லி - 61
பாட்னா - 37
கல்வித் தகுதி:
01.01.2026 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள பணியிடம் என்றால் தமிழ் படிக்கவும், எழுதவும், பேசவும், புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஜனவரி 1, 2026 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜனவரி 2, 2001-க்கு முன்னரோ அல்லது ஜனவரி 1, 2008-க்குப் பின்னரோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுப் பிரிவில் 10 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் சலுகை உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
மாத ஊதியமாக ரூ.46,029 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் அதன்பின் மொழித் திறனறித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வில் பகுத்தறிவுத் திறன், பொது ஆங்கிலம், பொது அறிவு, மற்றும் எண் திறன் என நான்கு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 30 கேள்விகள் (30 மதிப்பெண்கள்) கேட்கப்படும். தமிழகத்திலுள்ள விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை ஆங்கிலம், இந்தி அல்லது தமிழ் மொழிகளில் எழுதலாம்.
தேர்வு மையங்கள்:
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்/கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தர்மபுரி ஆகிய 15 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம்:
தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் (SC/ST), முன்னாள் ராணுவத்தினர் (Ex-s) மற்றும் மாற்றுத் திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு ரூ.50/- மற்றும் 18% ஜிஎஸ்டி. மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ₹450/- மற்றும் 18% ஜிஎஸ்டி. கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://opportunities.rbi.org.in/ தளத்திற்குச் சென்று, அங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் முன் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 4, 2026. விண்ணப்பிக்க இன்னும் 2 நாளே அவகாசம் இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் இப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வுஅறிவிப்பினை படிக்க; https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/OFFICEATTENDANT15012026FBA03C07BCA6419EA4D6B2165D9CAA7C.PDF












Click it and Unblock the Notifications