டிகிரி முடிச்சிருக்கீங்களா! ரிசர்வ் வங்கியில் வேலை.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஆர்.பி.ஐ எனப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 450 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை, மும்பை, பெங்களூர் என நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 450 உதவியாளர் பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதிகள் மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

கல்வி தகுதி: அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருபது அவசியம். எஸ்.சி/ எஸ்.டி/மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 1-9-2023 அன்றைய தேதிப்படி 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 2-9-1995-க்கு முன்பாகவோ, 1-9-2003-க்கு பின்பாகவோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் வழங்கப்படும். அதாவது 31 வயது வரை இப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, மொழி திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் முதல் நிலைத்தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் மெயின் தேர்வு நடைபெறும்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.20,700 மற்றும் இதர அலவன்ஸ்கள் உள்பட மாதம் ரூ.47,849 வழங்கப்படும். ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கவில்லை என்றால் கூடுதலாக 15 சதவிகிதம் HRA வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: போதுமான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://ibpsonline.ibps.in/rbiaaaug23/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும். பொது பிரிவினர், ஒபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் ரூ.450 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4-10-2023 ஆகும். முதன்மை தேர்வு அக்டோபர் 21 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தோராயமான தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், மெயின் தேர்வு டிசம்பர் 02, 2023 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழு விவரங்களையும் https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications