ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் வேலை.. 400 பணியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு சூப்பர் சான்ஸ்
சென்னை: ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 400 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்திலும் பணியில் அமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. என்ஜினியரிங் டிகிரி + அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமாக ரைட்ஸ் (RITES) உள்ளது. ரயில்வே உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஆலோசனை, பொறியியல் மற்றும் திட்ட விநியோக சேவைகளை வழங்கும் நிறுவனமாக இது செயல்படுகிறது.

ஹரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 400 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
அஸ்சிஸ்ட்ண்டண்ட் மேனேஜர் பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. (சிவில்), எலக்ட்ரிக்கல், எஸ்&டி, மெக்கானிக்கல், கெமிக்கல், உலோகவியல் ஆகிய காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, சிவில் பணிக்கு சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
வயது வரம்பு:
21 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். ஜெனரல்/ஒபிசி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600 ஆகும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் EWS பிரிவினருக்கு கட்டணம் ரூ.300 ஆகும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் : 25.12.2025 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/ என்ற இணையதளம்வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://www.rites.com/Upload/Career/Advertisement_M-89-120_pdf-2025-Nov-26-12-6-1.pdf
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications