4,660 காலியிடங்கள்.. ரயில்வே பாதுகாப்பு படையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. அழைக்கும் ஆர்பிஎப்
சென்னை: ஆர்பிஎப் எனும் ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.35,400ம், கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.21,700 சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
ஆர்பிஎப் எனும் ரயில்வே பாதுகாப்பு படையில்(Railway Projection Force or RPF) காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள்: ரயில்வே பாதுகாப்பு படையில் மொத்தம் 4,660 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி வாரியாக பார்த்தால் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) பணிக்கு 452 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். கான்ஸ்டபிள் பணிக்கு 4,208 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணிக்க விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பை பாஸ் செய்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 20 முதல் 28 வயதுக்குள்ளும், கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
மாத சம்பளம்: சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். கான்ஸ்டபிள் பணிக்க ரூ.21,700 சம்பளமாக வழங்கப்படும். அதன்பிறகு அரசு விதிகளின்படியும், ரயில்வே பாதுகாப்பு படையின் விதிகளின் படியும் ஆண்டுதோறும் சம்பள உயர்வு என்பது அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ எனும் இணைதயளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிபிடி தேர்வுக்கு பிறகு ரூ.400 திரும்ப வழங்கப்படும்.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் படை வீரர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்க விண்ணப்ப கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிபிடி தேர்வுக்கு பிறகு அந்த கட்டணம் திரும்ப வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சிபிடி (Computer Based Test), உடல் திறன் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications