RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க!
சென்னை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், உதவி லோகோ பைலட் (RRB ALP) பணியில் நாடு முழுவதும் 11,127 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு துறைகளில் ஒன்றாக ரயில்வே திகழ்கிறது. நிலையான வேலை, மாதாந்திர சம்பளம், பல்வேறு சலுகைகள் உள்ளிட்ட காரணங்களால் ரயில்வே பணிகளில் சேர வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. அந்த வகையில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட உதவி லோகோ பைலட் பணிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இன்று தான் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

மண்டல வாரியாக காலிப்பணியிடங்கள்
மொத்தம் 11,127 பணியிடங்கள் பல்வேறு ரயில்வே மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன.
* மும்பை (CR) - 1,078
* செகந்திராபாத் (ECoR) - 824
* புவனேஷ்வர் (ECoR) - 801
* சிலிகுரி (NFR) - 600
* அஜ்மீர் (NWR) - 600
* குவாஹாட்டி (NER) - 676
* ராஞ்சி (SER) - 745
தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை தெற்கு ரயில்வே (SR) மண்டலத்தில் மட்டும் 186 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மண்டலங்களுக்கான முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி என்ன?
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் NCVT அல்லது SCVT அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், வயர்மேன், மெக்கானிக் உள்ளிட்ட தொழிற்பயிற்சி பிரிவுகளில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது,
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
* எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
* எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
* ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
2026 ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, குறைந்தபட்ச வயது - 18 நிரம்பியவர்களும், அதிகபட்ச வயது - 30-க்குள் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பில் தளர்வு:
* SC/ST - 5 ஆண்டுகள்
* OBC (NCL) - 3 ஆண்டுகள்
* மாற்றுத்திறனாளிகள் - 10 முதல் 15 ஆண்டுகள் வரை
* முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.
சம்பள விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் லெவல்-2 அடிப்படையில் மாதம் ரூ.19,900 ஆரம்ப சம்பளமாக வழங்கப்படும். இதனுடன் பல்வேறு அரசு சலுகைகளும் கிடைக்கும்.
தேர்வு முறை எப்படி?
1. CBT-1 (முதல்நிலை கணினி வழித் தேர்வு)
2. CBT-2 (இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு)
3. CBAT (திறனறிவு தேர்வு)
4. ஆவண சரிபார்ப்பு
5. மருத்துவ பரிசோதனை
CBT-1 மற்றும் CBT-2 தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் நடைபெறும். ஆனால் CBAT தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
* SC/ST, பெண்கள், EBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையினர் - ரூ.250
* மற்ற விண்ணப்பதாரர்கள் - ரூ.500
தேர்வில் பங்கேற்ற பிறகு, குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் கட்டணத் தொகை திரும்ப வழங்கப்படும்.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே ஜூன் 14 தான் கடைசி நாள் ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான RRB Apply மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான அறிவிப்பு மற்றும் மண்டல வாரியான காலிப்பணியிட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க; https://drive.google.com/file/d/1GBbeA3fRFzrCwJThqqlaLWk-6wMz0SrZ/view












Click it and Unblock the Notifications