Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் வேலை.. ரயில்வேயில் 9144 காலியிடம்! டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களை அழைக்கும் RRB சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சென்னை சார்பில் 2 பிரிவுகளில் காலியாக உள்ள 9,144 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே உள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது.

RRB Chennai Recruitment 2024 for 9144 vacancies including Technician Grade I signal and Technician Grade III Posts

அந்த வகையில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சென்னை (RRB Chennai or Railway Recruitment Board Chennai) சார்பில் காலிப்பணியிடங்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் - மாத சம்பளம்: தற்போதைய அறிவிப்பின்படி டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு 1092 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு 8,052 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு மாதம் ரூ.29,200 சம்பளமாக வழங்கப்படும். அதேபோல் டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும். டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு விண்ணப்பிப்போர் 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், முன்னாள் படை வீரர்கள் என்றால் குறைந்தது 3 வயது முதல் அதிகபட்சம் 8 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்படும். மேலம் ரயில்வேயில் குரூப் சி, குரூப் டி பிரிவில் 3 ஆண்டு பணி முடித்தவர்கள் என்றால் 40 வயது முதல் 45 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.

கல்வி தகுதி: டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ, என்ஜினீயரிங் படிப்பை மேற்கூறிய பாடங்களை ஒருபாடமாக வைத்து முடித்திருக்க வேண்டும்.

டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு ஐடிஐயில் பிட்டர், பிட்டர் (ஸ்ட்ரக்சர்), போர்கர் அண்ட் ஹிட் ட்ரிட்டர், பவுண்ட்ரிமேன், பேட்டர்ன் மேக்கர், மாடூலர் (ரெப்ஃரக்டரி), கார்பென்டர், வெல்டர், பிளம்பர், பைப் பிட்டர், மெக்கானிக் (மோட்டார் வெகிள்), எலக்ட்ரிசீயன், மெக்கானிக் ஆட்டோ எக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், வயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் பவர் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் டீசல், மெக்கானிக் (ரீப்பேர் அண்ட் மெயின்டனென்ஸ் ஆஃப் ஹெலி வெகிள்), மெக்கானிக் ஆட்டோமொபைல், டிராக்டர் மெக்கானிக், மெஷினிஸ்ட், உள்பட பிற மெக்கானிக் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பணியமர்த்தப்படும் இடங்கள்: பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். சென்னையை பொறுத்தமட்டில் 27 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுதவிர அகமதாபாத், அஜ்மீர், திருவனந்தபுரம், பெங்களூர், செகந்திராபாத், ஹைதராபாத், போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், கோரக்பூர், கவுஹாத்தி, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், கொல்கத்தா, மால்டா, மும்பை, முசாபர் நகர், பாட்னா, பிரக்யாராஜ், ராஞ்சி உள்ளிட்ட பிற நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று (மார்ச் 9) ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8 ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் https://www.rrbchennai.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை திருத்தம் செய்ய ஏப்ரல் மாதம் 9 ம் தேி முதல் ஏப்ரல் 8 ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்து. எஸ்சி, எஸ்டி, முன்னாள் படை வீரர்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்றால் விண்ணப்ப கட்டணம் ரூ.250 செலுத்தினால் போதும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் பணி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை [email protected] இ-மெயில் மூலம் அல்லது 9592001188 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தீர்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர் அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+