மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. பெங்களூரில் பணியிடம்.. மாதம் ரூ.1.77 லட்சம் சம்பளம்!
சென்னை: பெங்களூரில் உள்ள ஆர் ஆர் ஐ எனப்படும் ராமன் ஆய்வுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினீயரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு நிறுவனம் என்பதால் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆர்.ஆர்.ஐ எனப்படும் ராமன் ஆய்வுக்கழகம் இயங்கி வருகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைந்த இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது. இயற்பியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
மத்திய அரசின் நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும். தற்போது இந்த நிறுவனத்தில் 11 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.
* என்ஜினியர் (மின்னணுவியல்) - 03
* பொறியாளர் A (ஃபோட்டானிக்ஸ்) - 02
* பொறியியல் உதவியாளர் C (சிவில்) - 01
* உதவியாளர் - 04
* உதவி கேண்டீன் மேலாளர் - 01
கல்வித் தகுதி:
* என்ஜினியர் எலக்ட்ரானிக்ஸ் பணியிடத்திற்கு எலக்ட்ரானிக்ஸ் / எம்எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம்.
* என்ஜினியர் போட்டோனிக்ஸ் பணிக்கு போட்டோனிக்ஸ் பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*என்ஜினியரிங் உதவியாளர் (சிவில்) பணிக்கு விண்ணபிப்பவர்கள் குறைந்தது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். சிவில் பாடப்பரிவை எடுத்து படித்து இருப்பது அவசியம். துறைசார்ந்த பிரிவில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
* உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். பொது நிர்வாகம், கொள்முதல், அக்கவுண்ட் ரிலேட்டடு தொடர்பான பணிகள் ஆகியவற்றில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் அவசியம்.
* கேண்டீன் மேனேஜர் பணிக்கு ஹோட்டல் மேனேஜ்மேண்ட் பட்டம் அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்து இருப்பது அவசியம். கணிணி புலமை அவசியம்.
* கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்:
Engineer A (Electronics) - சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ. 1,77,500 வரை வழங்கப்படும்.
Engineering Assistant C (Civil)- ரூ. 29,200 - ரூ. 92,300/- பணியிடங்களுக்கு தகுந்தபடி சம்பளம் மாறுபடும்.
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க முடியும். அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்த முழுமையான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தேர்வு அறிவிப்பினை படித்து அறிந்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rri.res.in/sites/default/files/other-openings/Advt_07_2025.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications