நர்சிங் முடித்தவர்களுக்கு செம ஜாப்! மாதம் ரூ.25,000 சம்பளம்.. எக்ஸாம் கிடையாது.. முழு விவரம்
மதுரை: மதுரை மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன சம்பளம் எவ்வளவு உள்ளிட்ட விரங்களை இங்கே காணலாம்.
மதுரை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் கீழ் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 34 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பார்மாசிஸ்ட், லேப் டெக்னிஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர் (03), மருந்தாளுநர் (09 பணியிடங்கள்), லேப் டெக்னிஷியன் ( 14), பல்நோக்கு சுகாதார பணியாளர் (08) என மொத்தம் 34 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு எம்.எஸ்.சி நர்சிங் முடித்து இருக்க வேண்டும். பார்மாசிஸ்ட் பணிக்கு துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்து இருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மாசிஸ்ட் கவுன்சிலில் கண்டிப்பாக பதிவு செய்து இருக்க வேண்டும்.
லேப் டெக்னிஷியன் பணிக்கு பிளஸ் 2 முடித்து இருக்க வேண்டும். அதோடு மெடிக்கல் லேப் டெக்னாலஜி பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பு முடித்து இருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடத்திற்கு 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. பிற பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர் பணிக்கு மாதம் ரூ. 25,500-ம், மருந்தாளுநர் பணிக்கு ரூ.15,000 /, லேப் டெக்னிஷியன் பணிக்கு ரூ.13,000/, பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு மாதம் ரூ.8,500 ம் சம்பளமாக வழங்கப்படும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும்.
விண்னப்பிப்பது எப்படி?: தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேவையான கல்வி தகுதி சான்றுகளில் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் இயக்குனர் சுகாதார பணிகள்,
துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகம்,
விஸ்வநாதபுரம், மதுரை -625014
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications