மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளம்! சென்னையில்தான் பணியிடம்
சென்னை: மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோவேவ் எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் & ரிசர்ச் சொசைட்டியில் (SAMEER) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமா, டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.19 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் செயல்படும் நிறுவனம்
Society for Applied Microwave Electronics Engineering & Research. இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் சென்னை, கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம், கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இந்த நிறுவனத்தில் 36 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* தொழில்நுட்ப உதவியாளர் - A - 09
* தொழில்நுட்ப உதவியாளர் - B - 06
* தொழில்நுட்ப உதவியாளர் - C - 01
* தொழில்நுட்ப உதவியாளர் - D - 05
* அறிவியல் உதவியாளர் - 06
* சயிண்டிபிக் ஆஃபிசர் - A - 09 என மொத்தம் 36 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. சில பணியிடங்களுக்கு அனுபவமும் கோரப்பட்டுள்ளது. டெக்னிஷியன் பி பணிக்கு பத்தாம் வகுப்பு + ஐடிஐ (ஃபிட்டர், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெகானிக் முடித்து இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வி தகுதி பற்றிய விரிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்:
தொழில்நுட்ப உதவியாளர் - A - 25 (வயது ) - சம்பளம் : ரூ.19,900/-
தொழில்நுட்ப உதவியாளர் - B - 27 - ரூ.21,700/-
தொழில்நுட்ப உதவியாளர் - C - 28 - ரூ.25,500/-
தொழில்நுட்ப உதவியாளர் - D - 30 - ரூ.29,200/-
அறிவியல் உதவியாளர் - 25 - ரூ.35,400/-
அறிவியல் அதிகாரி - A - 28 - ரூ.44,900/-
அரசு விதிகளின் படி வயது வரம்பில் உச்ச தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?
கணினி வழியிலான எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.100 கட்டணம் ஆகும்.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://sameer.gov.in/) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 31.10.2025. கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications