எஸ்பிஐ வங்கியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. மிஸ் பண்ணீடாதீங்க.. முழு விவரம்
சென்னை: 2056 Probationary Officer பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டுள்ளது . அக்டோபர் 5ம் தேதியான இன்று தொடங்கி 25.10.2021 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நாடு முழுவதும் காலியாக உள்ள 2056 புரொபேஷ்னரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு , நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று விதமான தேர்வுகளுக்கு பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

பணியின் பெயர்
மொத்த காலியிடங்கள்: 2056 (எஸ்சி 324, எஸ்டி 162, ஒபிசி 560, ews 200, பொது 810, மாற்றுத்திறனாளிகள் 80)
பணியின் பெயர் Probationary Officer
பணியிடம்: நாடு முழுவதும்
பணிக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் 5.10.2021 முதல் 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பட்டப்படிப்பு தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 31.12.2021க்குள் படித்து முடித்ததற்கான மதிப்பெண் சான்றிதழை நேர்முகத்தேர்வுக்கு வரும்போது சமர்பிக்க வேண்டும். 59.99% சதவீதம் மதிப்பெண் எடுத்தவர்கள் 60 சதவீதத்திற்கு கீழ் எடுத்தவர்களாவே கருதப்படுவார்கள். அதேபோல் 54.99% சதவீதம் மதிப்பெண் எடுத்தவர்கள் 55 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண் எடுத்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

வயது சலுகை
வயது தகுதி: பொதுப்பிரிவினர் 02.4.2021க்கு பின்னர் அல்லது 1.02.2000க்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது 30வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது சலுகையும், ஒபிசி பிரிவினருக்கு (non creamy layer) 3ஆண்டுகள் வயது சலுகையும் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது சலுகை உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது சலுகை உள்ளது.
குறிப்பு கிரிடிட் கார்டு அல்லது வங்கியில் ஏதேனும் கடன் வாங்கி பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதால் சிபில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

கடைசி தேதி
விண்ணப்பிக்க வேண்டிய முறை: எஸ்பிஐ Probationary Officers பணியிடங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அவற்றின் விவரம் https://sbi.co.in/web/careers , https://bank.sbi/careers. ஆகிய இணைதளத்தைபாருங்கள், மற்ற எந்த இணையதளத்தில் வரும் தகவல்களையும் நம்பி ஏமாற வேண்டாம். வேலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அறிவிப்புகளை இந்த இணையதளங்களில் தெளிவாக பார்க்கலாம்.
5.10.2021 முதல் 25.10.2021 வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 25ம் தேதி தான் கடைசி தேதி என்பதால் அதற்கு முன் விண்ணப்பித்துவிடுங்கள்.விண்ணபிக்க கட்டணம் உண்டு.

தேர்வு தகவல்கள்
விண்ணப்பித்தவர்கள் நவம்பர் முதல் இரண்டு வாரத்தில் பிரிலிமினரி தேர்வுக்கான கால் லெட்டரை https://sbi.co.in/web/careers , https://bank.sbi/careers இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்- ஆன்லைன் பிரிமினலரி தேர்வு நவம்பர் அல்லது டிசம்பரில் நடக்கும். டிசம்பர் 2வது அல்லது 3வது வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் டிசம்பர் 2 அல்லது 3வது வாரத்தில் மெயின் தேர்வுக்கான கால் லெட்டரை https://sbi.co.in/web/careers , https://bank.sbi/careers இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். ஆன்லைனில் மெயின் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். நேர்முகத்தேர்வு அல்லது குரூப் எக்சைசஸ் தேர்வுக்கான பேஸ்3 கடிதத்தை பிப்ரவரி 2022 முதல் இரண்டு வாரத்திற்குள் டவுன்லோடு செய்யலாம்.அதற்கு பிறகு பிப்ரவரி 3வது மற்றும் 4வது வாரத்தில் முடிவு நேர்முகத்தேர்வு அல்லது குரூப் எக்சைசஸ் தேர்வுகள் நடக்கும். அதன்பிற்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இறுதியாக வங்கி பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வெளியாகும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. https://sbi.co.in/web/careers , https://bank.sbi/careers இணையதளங்களில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை அடிக்கடி செக் செய்யுங்கள். மறந்தும் போலிகளை நம்பிவிடாதீர்கள்.












Click it and Unblock the Notifications