2,050 பணியிடங்கள்.. எஸ்பிஐ வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு! விண்ணப்பிக்க மறந்தவர்கள் விட்றாதீங்க
சென்னை: எஸ்பிஐ வங்கியில் (SBI) 2,050 சிறப்பு அதிகாரி (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க நேற்றுடன் கடைசி தேதி முடிவடைந்த நிலையில் இன்னொரு வாய்ப்பினை எஸ்பிஐ வழங்கியுள்ளது. இதன்படி வரும் 25 ஆம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் முதன்மையாக இருப்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. எஸ்பிஐ வங்கியில் பணியாற்ற வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருக்கின்றது. அரசு பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் + சலுகைகள் கிடைக்கும்.

பணியிடங்கள் விவரம்:
எஸ்பிஐ வங்கியில் சிபிஓ எனப்படும் வட்டார அடிப்படையிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. மொத்தம் 2,050 சிபிஓ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 31.12.2025 அன்று தேதிப்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டாம் அட்டவணையில் இடம்பெற்றுள்ள வணிக அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் அதிகாரியாக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
* 31.12.2025 அன்று தேதிப்படி, 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 1.1.1996 அன்று தேதிக்கு முன்போ அல்லது 31.12.2004 ஆம் தேதிக்கு பின்போ பிறந்து இருக்கக்கூடாது.
* அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
மாதம் ரூ.48,480/- சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://sbi.bank.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல், உள்ளூர் மொழித் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வானது வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் 750 ஆகும். SC/ST/PwBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்
தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://sbi.bank.in/documents/77530/52947104/28012026_Advertisement+-+Final.pdf/3b8a2b1b-2c63-14d0-0938-bd66727dad43?t=1769602529122












Click it and Unblock the Notifications