எஸ்பிஐ வங்கியில் ரூ.60,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. இன்னும் சில நாட்களே இருக்கு!மிஸ் பண்ணாதீங்க
சென்னை: எஸ்பிஐ வங்கியில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாட்டிலுள்ள வங்கிகளில் ஐபிபிஎஸ் மூலமே காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அதேநேரம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் மட்டும் தனியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கியில் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 1226
பணி: Circle Based Officer
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 21 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
ஊதியம்: ரூ.36,000 - 63,840
விண்ணப்பக் கட்டணம் - பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ 750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - டிசம்பர் 29, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://sbi.co.in/documents/77530/11154687/081221-CBO-21+Final+Detailed+Advt+ENG.pdf/6d3a8188-f5a6-e9dd-98fc-e580796a0766?t=1638963781497
விண்ணப்பிக்க
https://sbi.co.in/web/careers/current-openings


Click it and Unblock the Notifications
