எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை.. 541 பணியிடங்கள்.. 85,000 சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 541 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 48 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ உள்ளது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. எஸ்பிஐ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. பொதுத்துறை வங்கி என்பதால் நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, சலுகைகள் கிடைக்கும்.

sbi-bank-job-recruitment-541-probationary-officer-vacancies-up-to-85-000-salary-how-to-apply

எனவே எஸ்பிஐ வங்கியில் வெளியிடும் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து ஆர்வமுடன் தேர்வர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 541 காலிப்பணியிடங்களை நிரப்ப எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

541 புரொபேஷனரி அதிகாரி - பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும்.

வயது வரம்பு:

01.4.2025 தேதிப்படி 21 வயது நிறைவடைந்தவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு. அதன்படி பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 15 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 48,480 - முதல் ரூ. 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு மையங்களை பொறுத்தவரை முதல் நிலை தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும். முதன்மை தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. ஆன்லைன் முறையில் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 24.06.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2025 ஆகும்,.

முதல் நிலை தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை / ஆகஸ்ட்
மெயின் தேர்வு: செப்டம்பர் 2025
நேர்முகதேர்வு நடைபெறும் நாள்; அக்டோபர் /நவம்பர் 2025.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+