SBI Job: எஸ்பிஐ வங்கியில் வேலை.. 2,050 பணியிடங்கள்.. 48 ஆயிரம் சம்பளம்! யார் யார் விண்ணப்பிக்க முடியும்?
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 2,050 வட்டார அடிப்படையிலான அதிகாரி (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.48 ஆயிரம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் முதன்மையாக இருப்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி. இந்த வங்கியில் பணியாற்ற வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளாக உள்ளது. இதனால் தேர்வு அறிவிப்பினை எதிர்பார்த்து படித்து வருகின்றனர். அரசு பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் + சலுகைகள் கிடைக்கின்றன.

sbi bank: காலிப்பணியிடங்கள் விவரம்:
தற்போது எஸ்பிஐ வங்கியில் சிபிஓ எனப்படும் வட்டார அடிப்படையிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,050 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மொத்தம் 2,050 சிபிஓ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* 31.12.2025 அன்று தேதிப்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டாம் அட்டவணையில் இடம்பெற்றுள்ள வணிக அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் அதிகாரியாக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது கட்டாயம் ஆகும்.
வயது வரம்பு:
* வயது வரம்பைப் பொறுத்தவரை, 31.12.2025 அன்று தேதிப்படி, 21 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 1.1.1996 அன்று தேதிக்கு முன்னதாகவோ அல்லது 31.12.2004 ஆம் தேதிக்கு பின்னராகவோ பிறந்து இருக்கக்கூடாது.
* அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) வகையைப் பொறுத்து 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480/- சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://sbi.bank.in/ என்ற SBI வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு, நேர்காணல், உள்ளூர் மொழித் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வானது வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.750/-ஐ ஆன்லைன் முறையில் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் இக்கட்டண விவரங்களை கருத்தில் கொள்ளவும்.
தேர்வு நடைபெறும் இடங்கள்
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2026 பிப்ரவரி 18 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://sbi.bank.in/documents/77530/52947104/28012026_Advertisement+-+Final.pdf/3b8a2b1b-2c63-14d0-0938-bd66727dad43?t=1769602529122












Click it and Unblock the Notifications