நோ எக்ஸாம்.. இன்டர்வியூ மட்டுமே! ரூ.45,000 வரை சம்பளம்! ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சூப்பர் வேலை
சென்னை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரீசால்வர் பணிக்கு சென்னை உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதசம்பளமாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வழங்கப்படும்.
இந்தியாவில் முன்னணியில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை உள்பட பல சர்க்கிள்களில் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தற்போது ரீசால்வர் (Resolver) பணிக்கு 94 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சென்னையில் 5 பேர் அண்டை மாநிலங்களில் உள்ள பெங்களூரில் 6 பேர், ஹைதராபாத்தில் 4 பேர், மும்பை மெட்ரோவில் 3 பேர், மகாராஷ்டிராவில் 6 பேர், திருவனந்தபுரத்தில் 2 பேர் உள்பட இந்தியா முழுவதும் மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு & தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 60 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.11.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். பணிக்கு குறிப்பிட்ட கல்வி தகுதி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் எஸ்பிஐ-யில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருப்பதோடு, சிஸ்டம் குறித்த அறிவை பெற்றிருக்க வேண்டும்.
மாதசம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் sbi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 21ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications