ஜாக்பாட்! மாதசம்பளம் ரூ.40,000 டூ ரூ.1.40 லட்சம்! ரூபாய், நாணய தயாரிப்பு கழகத்தில் சூப்பர் வேலை! செம
டெல்லி: இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள ஏராளமான உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், பாஸ்போர்ட் உள்பட முக்கிய ஆவணங்கள் தயாரிக்கப்படுவதோடு, அதற்கான காகிதங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த கழகத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைந்துள்ளது. இதுதவிர மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், திவாஸ், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் ரூபாய் மற்றும் நாணய தயாரிப்பு, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவண தயாரிப்புக்கான நிறுவனங்கள் உள்ளன. மேலும் ஹைதராாத் அருகே உள்ள நர்மதாபுரத்தில் காகித உற்பத்தி ஆலை உள்ளது.

இந்நிலையில் தான் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:
காலியிடங்கள்: இந்திய பாதுகாப்பு பேப்பருக்கான அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி கழகத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பிரிவுக்கு மொத்தம் 37 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி பிரிண்டிங் பிரிவுக்கு 7 பேர், டெக்னிக்கல் கன்ட்ரோல் பிரிவுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பபட உள்ளனர்.
மேலும் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பரிவுக்கு தலா 4 பேர், எலக்ட்ரானிக்ஸ், ஆர்டிஸ்ட்/டிசைனர், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு தலா 3 பேர், குவாலிட்டி அசூரன்ஸ்-பேப்பர், குவாலிட்டி அசூரன்ஸ், Assay பிரிவுகளுக்கு தலா 2 பேர், இன்பர்மேஷன் டெக்னாலஜி, Metallurgy பிரிவுக்கு தலா ஒருவர் என 37 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு பிஇ, பிடெக் பிரிவில் பிரிண்டிங் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி Metallurgy, கெமிக்கல் பிரிவில் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்எஸ்சி வேதியியல், டிகிரியில் பைன் ஆர்ட், கிராபிக் டிசைன், கமர்சியல் ஆர்ட், எம்பிஏ, எம்சிஏ முடித்தரவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
மாதசம்பளம்: விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.spmcil.com எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் வரும் 8 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி, பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications